குழந்தை ம.சண்முகலிங்கம் (மூலம்), நாகேந்திரம் நவராஜ் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
84 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-33-1.
‘உறவுகள்’ என்ற இந்நாடகம், 1980களில் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களால் எழுதப்பட்டது. 25.05.1980இல் வி.எம்.குகராஜாவின் நெறியாள்கையில் வீரசிங்க மண்டபத்தில் முதன்மேடையேறியது. செல்லர் (செல்வநாயகம்), அவரது மனைவியார் கனகம் (கனகம்மா), இவர்களது மகன் சுந்தர் (சுந்தரராஜா), வேலர் (வேலுப்பிள்ளை), அவரது ஏக புத்திரன் அழகு (அழகுசுந்தரம்), நாகர் (நாகலிங்கம்), அவரது மகள் கௌரி ஆகிய ஏழு பாத்திரங்களினூடாக இச்சமூக நாடகம் நகர்த்தப்படுகின்றது. திருமண ஒழுங்குகளின்போது, அதிக சீதனம்-பெரிய இடம் என்றால் மாப்பிள்ளை வீட்டார் மனம்மாறி ஆள்மாற்றித் திருமணம் செய்வது போல, பெண்வீட்டாரும் மனம் மாறித்திருமணம் செய்வார்கள் என்ற கூற்றை அடிப்படையாக வைத்து இந்நாடகம் எழுதப்பட்டுள்ளது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 397ஆவது நூலாக வெளிவந்துள்ளது.