17608 கூடி வாழ்வோம்: நாடகப் பிரதிகள்.

சந்திரிகா தர்மரட்ணம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

184 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 21.5×14.5 சமீ.

இந்நூலில் ஆனந்தம் பெற ஆலயம் தொழுவோம், இக்கரைக்கு அக்கரை பச்சை, தன் நெஞ்சே தன்னைச் சுடும், குருபக்தி, தென்றலே என்னைத் தொடு, மயில் இறகு, காரைக்கால் அம்மையார், கால மாற்றம், ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, சாதனைகள் புரிந்திடுவோம், கூடிவாழ்வோம், ஜீவகாருண்யம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட நாடக எழுத்துருக்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு நாடகமும் எழுதப்பட்ட ஆண்டு, முதல் மேடையேற்றம் கண்ட திகதி, மற்றும் மேடையேறிய இடங்கள் என பல்வேறு தகவல்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. நூலாசிரியர் சந்திரிகா தர்மரட்ணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 265ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

14138 திருக்கோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் தேவஸ்தானம் கும்பாபிஷேக மலர்.

இ.வடிவேல், மு.சுந்தரலிங்க தேசிகர், வே.வரதசுந்தரம் (தொகுப்பாசிரியர்). திருக்கோணமலை: அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் தேவஸ்தானம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2001. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம், 28B புதிய சோனகத் தெரு). (12), 160