17643 உலகம் முழுவதும் எங்கள் கதைகள் (முஸ்லிம் பெண்களின் சிறுகதைகள்).

சம்மாந்துறை மஷூறா (தொகுப்பாசிரியர்). மருதமுனை 4: ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன், மஷூ நீர் மஹால், லேக் வீதி, 1வது பதிப்பு, 2023. (மருதமுனை: கோல்டன் பிரின்டர்ஸ்).

xi, 117 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21×14 சமீ., ISBN: 978-624-6475-00-0.

புத்தளம், திருக்கோணமலை, பதுளை, காத்தான்குடி, கண்டி, கம்பளை ஆகிய பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை உள்ளடக்கிய இத் தொகுதியில், புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா (புதிய வானில்), நியுசிலாந்து மரீனா இல்யாஸ் ஷாபி (புதிய கனவுகள்), சம்மாந்துறை மஷூறா (விலைபோகும் இலடசியங்கள்), கண்டி யு.ரு.டு.ளு. அறபா மன்சூர் (நிலாவோடு பேசுகிறாள்), கம்பளை அஸ்மா தீன் (சுயம் தெளிகின்றாள்), கிண்ணியா எஸ்.ஃபாயிஸா அலி (பொன் கூடுகள் சிதைகையில்), மூதூர் கஸானா முனாஸ் (ஞானம் பிறந்தது), அட்டாளைச்சேனை ஷப்ரா இல்மத்தீன் (புரிதல்), புத்தளம் றசூல் நகர் சதீகா றஸ்லி (அவள் தாங்கும் உலகம்), தர்ஹா நகர் ஹஸனியா இர்பான் (விடுதலை), ஏறாவூர் என்.எம்.ஆரிபா (அவள் வெளிநாடு போகிறாள்), திருக்கோணமலை ஜனூல் கதீஜா அன்சார் (அவள் பயணமாகின்றாள்), காத்தான்குடி ஜெஸ்மின் ரமீஸ் (விடை காணாத வினாக்கள்), நிந்தவூர் எம்.பி.பர்சானா (கறுத்தக்கொழும்பான்), மருதமுனை ஜெஸீமா முஜீப் (தேடிய பாசம்) ஆகிய இளம் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை சம்மாந்துறை மஷூறா தொகுத்து வழங்கியுள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 119504).

ஏனைய பதிவுகள்

14677 அவர்கள் அப்படித்தான்.

யோகா யோகேந்திரன். திருக்கோவில்: திருமதி யோகா யோகேந்திரன், யோகவாசா, 1வது பதிப்பு, 2015. (அக்கரைப்பற்று: மல்ட்டி ஓப்செட் அச்சகம்). xvi, 153 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-41546-1-2.