17650 என்னப்பா இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையோ.

(பெண் மனசு கதைகள்). சந்திரவதனா செல்வகுமாரன். ஜேர்மனி: மனஓசை, Manaosai Verlag, Schweickerweg  29, 74523  Schwabisch Hall, Deutschland, 1வது பதிப்பு, நவம்பர் 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை).

38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

இந்நூலில் உள்ள கதைகள் 2001-2002 காலப் பகுதியில் ‘பெண் மனசு’ என்ற தலைப்பில் ஐ.பீ.சீ தமிழ் வானொலியில் ஒலித்தவை. பாரிஸ் ஈழமுரசுவிலும் சக்தி பெண்கள் இதழிலும் பிரசுரமானவை. பல்வேறு ஊடகங்களில் மீள்பிரசுரமானவை. என்னப்பா இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையோ?, கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா, எனக்குத் தெரியும், அப்ப பிரச்சினை, ஏன் தான் பெண்ணாய் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. சந்திரவதனா செல்வகுமாரன் மேலைப் புலோலியூர் பருத்தித்துறை, அத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான இவர் மே 1986இலிருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனியில் Schwaebisch Hall நகரில் வாழ்ந்து வருகின்றார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 122213).

ஏனைய பதிவுகள்

Casino Action Review 2019

Content Who is Behind Ignition’s Mobile Giving? Are there Free Slots Games To possess Android os Devices? Investigating Iphone 3gs Casinos And you may Gambling

15389 உலகம் உவப்ப.

இராசையா தனராஜ். பொகவந்தலாவ: நடனக் கழல், கொட்டியாகலை மேற்பிரிவு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (யாழ்ப்பாணம்: கக்ஸ்ரொன் பிரின்டர்ஸ், கல்வியங்காடு). xvi, 113 பக்கம், விலை: ரூபா 398., அளவு: 23.5×17 சமீ., ISBN: