வயிரமுத்து திவ்வியராஜன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், இணை வெளியீடு, மல்லாகம்: கலாலயம் பதிப்பகம், 68, புத்தகப் பண்பாட்டுப் பேரவை, நீதிமன்ற வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
98 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-0958-10-8.
திவ்வியராஜனின் 30 சிறு கதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. நப்பியள், கிழிச்செறி, கைரேகையும் யோகமும், அம்மா வில்லுப்பாட்டு, யாரொடு நோவேன், தேக்கம், சொந்தம், ஜன-நாய்-அகம், சபலமும் பலமும், வெங்காயமும் பெருங்காயமும், தாய்மை, விடுதலைக்காய் புறப்பட்டவன், புதைகுழி, பேச்சுவார்த்தை, நடுவீட்டில் நரகல், வாழ்க்கைத் துணை, உறைந்து கிடக்கு, நடுவீதியில் நடுவிரல், மக்கட்பேறு, தண்ணியில் கண்டம், வந்தான் வரத்தான், மோதல், வாழ்வு, இளையோர் கனவுகள் பலிக்கும், சகுனம் சரியில்லை, மனிதர்கள் பலவிதம், அதனால் என்ன, மனிதர், பயம் அறியார், பவிசு ஆகிய குறுந் தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. வ.திவ்வியராஜன் சமூகச் செயற்பாட்டில் 1984 முதல் 1990கள் வரை ‘மனித உரிமைகளுக்கான வெகுஜன இயக்கத்தில்’ முன்னணி செயற்பாட்டாளர்களுள் ஒருவராக விளங்கியவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற நாளிலிருந்து நல்லதொரு கலைஞராக, கவிஞராக, நாடகராக, பேச்சாளராக, பாடகராக விளங்குபவர். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 288ஆவது நூலாகவும் கலாலயம் பதிப்பகத்தின் 7ஆவது நூலாகவும் வெளிவந்துள்ளது.