17653 ஒரு பாய்மரப் பறவை.

பொ.கருணாகரமூர்த்தி. நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2024. (சென்னை 04: Real Impact  Solutions, இல. 12, மூன்றாவது தெரு, அபிராமபுரம் கிழக்கு, மைலாப்பூர்).

198  பக்கம், விலை: இந்திய ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-19034-87-1.

யாழ்ப்பாணம், புத்தூரில் பிறந்த பொ.கருணாகரமூர்த்தி 1980ஆம் ஆண்டில் தாயகத்திலிருந்து ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து சென்று அங்கே பேர்ளின் நகரில் வாழ்ந்து வருகிறார். 1985இல் தமிழக இதழான கணையாழியில் இவர் எழுதிய ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ என்ற குறுநாவலின் வாயிலாக இலக்கிய உலகில் கால் பதித்தவர். இத்தொகுப்பில், ஒரு பாய்மரப் பறவை-1, ஒரு பாய்மரப் பறவை-2, தேவதைகளின் நல்கை, சோதனை சுமக்கும் வேளை, கார்த்திகை மாசத்து நாய், உணர்வோடு விளையாடும் பறவைகள், கவிதைகளைச் சுமந்து திரிபவள், பச்சை மட்டையர், தனிமைக்குள் நீந்தும் ஓங்கில் (னுழடிாைெ), தாத்தா ஒரு மாதிரி, பெயர் தெரியாத மனிதன், அப்பாவின் நிமித்தம், நேர்த்தியன் (திருத்தமானவன்) ஆகிய 13 தலைப்புகளில் எழுதப்பட்ட இவரது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இதில் ‘ஒரு பாய்மரப் பறவை” என்ற தலைப்புச் சிறுகதை 2021ஆம் ஆண்டு பேசும் புதிய சக்தி இதழ், எழுத்தாளர் ராஜகுரு நினைவாக நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலாவதாகத் தேர்வுசெய்யப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. நூலக பதிவிலக்கம் 72539).

ஏனைய பதிவுகள்

Hugo 2 Slot

Content Slot -Spiele the secret of ba – Păcănele Online Sloturi And Jocuri De De Aparate Deasupra Bani Reali So Gewinnt Man Beim Virtuellen Blackjack