திக்குவல்லை கமால் (இயற்பெயர்: முகம்மது ஜெலால்தீன் முகம்மது கமால்). கொழும்பு: கலாசார அலுவல்கள் திணைக்களம், உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, 8ஆம் மாடி, செத்சிறிபாய, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (ராகமை: நெலும் பிரின்டர்ஸ்).
v, 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-0353-38-5.
இந்நூலில் அகதி அந்தஸ்து, வரவேற்புப் பாடல், தங்கை, கனவுத் தாரகை, அகமுகம், இடைக்காலம், உரிமைப் போராட்டம், சைக்கிள், விடிவு, ஓய்வூதியம் ஆகிய 10 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 2013- திறந்த கையெழுத்துப் பிரதியாக்கப் போட்டியில் தெரிவுசெய்யப்பட்ட வெற்றிப் படைப்பு இதுவாகும். திக்குவல்லை கமால் என்ற புனைபெயரில் இலக்கிய உலகில் அறிமுகமாகியுள்ள முகம்மது ஜெலால்தீன் முகம்மது கமால், ஈழத்து தமிழ்க் கலை இலக்கியத் துறையில் பங்காற்றி வரும் தென்னிலங்கை முஸ்லிம் படைப்பாளிகள் வரிசையில் கவனத்திற்குரிய ஒரு படைப்பாளியாவார். இலங்கையின் தெற்கு மாகாணத்தில், மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள திக்குவல்லை எனும் ஊரில் பிறந்த கமால், அக்கிராமத்து மக்களின் பேச்சு வழக்கினை கொண்ட படைப்புக்களை ஈழத்து படைப்பிலகிற்கு வழங்கியவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராவார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 78623).