உ.நிசார். மாவனல்லை: பானு வெளியீட்டகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2021. (மாவனல்லை: எம்.ஜே.எம்.அச்சகம், 119, பிரதான வீதி).
128 பக்கம், விலை: ரூபா 360., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-0503-21-6.
உ.நிசார் என்ற பெயரில் நீண்டகாலமாக எழுதிவரும் மாவனல்லை எச்.எல்.எம். நிசார் எழுதிய ஐந்தாவது சிறுகதைத் தொகுதி இதுவாகும். இதிலுள்ள எட்டு சிறுகதைகளும் 2016-2019 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டவை. இவை இனம், காலசர்ப்பம், உரிமைப் போராட்டம், பட்டினவாசிகள், திருப்பம், எதிர்பார்ப்பு, பனிமூட்டம், கருவண்டுகள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டவை. தான் பிறந்து வளர்ந்த மண்ணில் தன்னுடன் ஒட்டி உறவாடியவர்களுடன் தான் கண்டவைகளும் கேட்டவைகளும் தனது அனுபவங்களும் இக்கதைகளின் பாத்திரங்களை உருவாக்க தனக்குத் துணைபுரிந்தன என்கிறார் நிசார். அதன் மூலம் தனது சமூகத்தில் உள்ள ஒரு சிலரின் அறியாமை, ஆதிக்கம், பொறாமை, சூது, களவு, பொய், சூழ்ச்சி, இரக்கம், தயவு, அன்பு, கருணை, விட்டுக்கொடுத்தல், பிடிவாதம் போன்ற பல்வேறு பண்புகளையும் படம்பிடித்துக் காட்டியுள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 109882).