மனோ சின்னத்துரை (இயற்பெயர்: சின்னத்துரை மனோகரன்). சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2024. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).
120 பக்கம், விலை: இந்திய ரூபா 145., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-95256-35-3.
இந்நூலில் மனோவின் 18 கதைகள் இடம்பெற்றுள்ளன. கன்னக்கோல், அந்திப் பூ, இருமல், மாசிலாமணியும் நாற்பது திருடர்களும், அச்சுதனின் அம்மா, அணை, சாய்மனைக் கதிரை, அப்பா வளர்த்த பிள்ளை, உயிர்வதை, தானம், பிரிவு, திவ்ய தரிசனம், துணை, ஆதலினால், கிரவுஞ்சி, நோ, அம்மாவின் காதலன், அந்தகாரம் ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. மனோ சின்னத்துரை பாரிசின் புறநகர் பகதியில் உள்ள குடும்ப இயக்கவியலின் நுணுக்கங்களை ஆராய்ந்தாலும், தாயகத்தில் உள்ள மனிதர்களை உணர்வுபூர்வமாக அலசும்போது அவரது வார்த்தைகள் வாசகர்களை ஈர்க்கும் சக்தி பெறுகின்றன. இவரது முன்னைய சிறுகதை நூல்களான கொரோனா வீட்டுக் கதைகள், சிலங்கிரி ஆகியவற்றைத் தொடர்ந்து இந்நூல் வெளிவந்துள்ளது.