ஆதவன் சரவணபவன். கிளிநொச்சி: மகிழ் பதிப்பகம், 754, கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, 2024. (கிளிநொச்சி: மகிழ் பதிப்பகம், 754, கனகராசா வீதி, திருநகர் வடக்கு).
v, 137 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 22×14.5 சமீ.
‘இலங்கையின் உள்நாட்டுப் போரும் அதிலிருந்து மீண்டு சிங்கப்பூரில் நிகழ நேர்ந்த புதிய கள வாழ்வும் இடையீடு செய்யும் கதைக்களத்தில் பெருகிக்கொண்டிருக்கும் கதைகள் இவை. ஒரு நெருக்கடிக் கால நெடுந்தொலைவுப் பயணியின் வாழிநெடுகச் சந்திக்கும் பல்வேறு மனிதர்களும் தோன்றும் காட்சிகளும் நிகழும் கணங்கள் பல்வேறு வாழ்க்கைச் சுவடுகளையும் அசாத்தியங்களையும் காண்பிக்கின்றன’ (கவிஞர் கருணாகரன் அணிந்துரையில்). ச.ஆதவனின் முதலாவது தொகுப்பாக வெளிவரும் இந்நூலில் வெப்பவலயம், இரண்டு மணித்தியாலங்கள், குல்லமடை, விசாரணை, பித்தளைக்கொக்கு, கள்ளியின் கதை, சின்னம்மா, இரண்டாம் உலகம், வீட்டுச் சாப்பாடு, ஒரு மாமரத்தின் கதை, பகைவர்கள், வேபனம், தாலாட்டு, குதிரை வண்டில், ஐந்து பெண்கள், இச்சை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72573).