17672 சூல்சோறு (சிறுகதைகள்).

கொழும்பு எம்.ஏ.ரஹீமா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, கார்த்திகை 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

100 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-19-1.

கனவுகள் கலைகின்றன, ஸீகுவின்ஸ், சூல்சோறு, மரண அறிவித்தல், ஒரு பெண்புலி சீறுகிறது, அவர்கள் விழித்துவிட்டார்கள், கல்யாணக் கோலங்கள், பார்வை, சுமைகள், உயிர்ப்பு, உப்பைத் தின்றவள், எதிரொலி, இழுக்கத்தின் பழி, அந்த நீர்ப்பாத்திரம் ஆகிய 14 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 296ஆவது நூலாக வெளிவந்துள்ளது. ‘சூல்சோறு’ என்பது தலைப்பிரசவத்தை எதிர்கொள்ளும் பெண் தொடர்பான ஒரு முஸ்லீம் பண்பாட்டு அம்சமாகும். அதற்குள் எழும் எள்ளலும் அதனால் மேற்கிளம்பும் ரோசமும் கதைக்கு மேலும் மெருகூட்டுகின்றன. எம்.ஏ.ரஹீமா, 1978களில் தனது எழுத்துலகப் பிரவேசத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே அச்சு ஊடகங்களில் மாத்திரமன்றி இலத்திரனியல் ஊடகங்களிலும் படைப்பாக்கங்களை வெளியிட்டு வந்துள்ளார். தெண்டர் ஆசிரியராக கொழும்பு கொட்டாஞ்சேனை முஸ்லிம் வித்தியாலயத்தில் தனது ஆரம்பகாலங்களில் பணியாற்றியவர். பின்னர் தர்காநகர் ஆசிரிய கலாசாலைக்குச் சென்ற ரஹீமா அங்கே தனது ‘பயிற்றப்பட்ட ஆசிரியர்’ பயிற்சியை மேற்கொண்டார். ரஹீமா 1978-2023 காலப்பகுதியில் 25 முதல் 30 கதைகளுக்கு மேல் எழுதியிருக்கவில்லை. அவற்றுள் ஐம்பது சதவீதமே இன்று கைக்கெட்டி நூலுருவாகியுள்ளது.

ஏனைய பதிவுகள்

12310 – கல்விப் பொதுத்தராதரப் பத்திரப் பரீட்சை (சாதாரணம்): 1978ஆம் ஆண்டு 10ஆந் தரத்துக்கான பாடத்திட்டம்.

கல்வி அமைச்சு. கொழும்பு: இலங்கை பரீட்சைத் திணைக்களம், கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, ஜனவரி 1978. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம், பரீட்சைத் திணைக்களம்). 87 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21X14 சமீ.