17678 தாக்கங்கள் (சிறுகதைத் தொகுதி).

சு.கருணாநிதி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, கார்த்திகை 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

102 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-16-0.

80களில் எழுதத் தொடங்கிய சு.கருணாநிதி, ஈழந்தி, வேலணையூரான் ஆகிய புனைபெயர்களிலும் எழுதிவந்தவர். பிரான்சில் புலம்பெயர்ந்து வாழும் இவர் 1993இல் வெளியிட்ட ‘ஒரு மனிதன்’ கவிதைத் தொகுப்பிற்குப் பின்னர் இரண்டாவது நூலாக வெளிவரும் இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். கருணாநிதியின் விபரிப்புக்கள் துல்லியமான மொழியில் ஆழமான விடயங்களையும் எளிமையான வடிவில் வெளிக்கொணரும் சக்தி வாய்ந்தவை. யாழ்ப்பாணப் பேச்சுவழக்கை இலக்கிய மொழியாக்கும் கலை அவருக்குக் கைவந்தவிடயம். அவரது இத்தொகுப்பில் உள்ள அனைத்துப் படைப்புகளிலும் அந்த மொழியின் வாசத்தை வாசகரால் நுகரமுடியும். இதில் ‘வெ எர்ர்’, குட்டிநாயும் அவனும், கைவிடப்பட்ட நிலம், பாத்திரங்கள், தாய்மடி, இராசமணி, இருவேறு உலகங்களில் இரண்டு நண்பர்கள், கடாய் வளர்த்தல், கோயில், ஆண், வர்க்கம் எங்கும் ஒன்றுதான், அகதி ஆகுதல், தேடல், மண்ணைத் தேடும் மனங்கள், கோபுரத்து பொம்மைகள், லண்டன் இன் 2001 (டுழனெழெ ைெ 2001), தாக்கங்கள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 17 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 294ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்