17679 தியாகத் தீயில்: சிறுகதைகள்.

மயில் மகாலிங்கம். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, மாசி 2022. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி). 

xiv, 114 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-624-5849-16-1.

இது மகுடம் வெளியீட்டகத்தின் 50ஆவது நூலாக வெளிவந்துள்ளது. இதில் ஜேர்மனியில் வசிக்கும் மயில் மகாலிங்கம் அவர்கள எழுதிய, அடியாதது படியாது, தியாகத் தீயில், அண்ணே அண்ணே வாத்தியாரண்ணே, எழுதியது எழுதியபடி, கசிப்பு, கத்தியின்றி இரத்தமின்றி, கராட்டி மாஸ்டர் கணேசன், குரு தட்சணை, பஞ்சமி, மடிப்பிச்சை, மரம் தாவும் மந்திகள், முதலை வேட்டை, வாய்க்காலும் வரம்புகளும், விதி வலியது ஆகிய 14 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மயில் மகாலிங்கம் திருக்கோணமலை மாவட்டத்தில் ஆலங்கேணி கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது கதைகளில் தான் பிறந்த மண்ணைப் படம்பிடித்துக் காட்டத் தவறுவதில்லை. அம்மண்ணில் வாழும் மக்கள் சந்தித்த, இன்றும் சந்தித்துவரும்  பிரச்சினைகள், கடந்த கால விடுதலைப் போராட்டத்தின் வலி என அவரது சிறுகதைகள் தமிழ் இனத்தின் மீதான அடக்குமுறையை தெளிவாகவும் உணர்வுபூர்வமாகவும் பதிவுசெய்கின்றார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 107402).

ஏனைய பதிவுகள்

13265 பஹாய் ஆவது எப்படி?

இந்திய பஹாய் தேசிய ஆன்மீக சபை (மூலம்), நவாலியூர் சோ.நடராசன் (தமிழாக்கம்). புதுடில்லி: பஹாய் பப்ளிஷிங் ட்ரஸ்ட், தபால் பெட்டி எண் 19, 1வது பதிப்பு, நவம்பர் 1977. (சென்னை 600017: Balmursuns Printers,