ஏ.எஸ்.சற்குணராஜா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, நவம்பர் 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
120 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-14-6.
பருத்தித்துறை, வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ஏ.எஸ்.சற்குணராஜா. ஆசிரியராக, ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றி, கல்வி நிர்வாக சேவைக்குத் தெரிவானதன் மூலம் பணிப்பாளராக அவதாரம் எடுத்தவர். தனது மூன்றாவது நூலாக வெளியிடும் இச்சிறுகதைத் தொகுதியில் ஏ.எஸ்.சற்குணராஜா அவர்கள் எழுதிய நிஜம், கண்டதும் கேட்டதும், நம்பிக்கை, விடுதலை, வன்மம், மூன்று பௌர்ணமிகள், சிவமூலம், பிணைப்பு, இணைவு, செயற்பட்டு மகிழ்வோம், திருப்பம், அறிந்தவை, சகஜம், பயணம் ஆகிய 14 சிறுகதைகளை தொகுத்து வழங்கியுள்ளார்.