17691 பின் தொடரும் வலி.

மு.அநாதரட்சகன்;. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

128 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-26-9.

பலியாடுகள், வெளியில் ஒருவர், ஆறாத் துயர், பின்தொடரும் வலி, சப்பாத்து, விடிவு, காலம் கொன்ற நினைவுகள், இரசனை, பசி, காத்திருப்பு, ஞானம், ஆயுள் நூறு, இன்னொரு கோணம், யாரொடு நோவேன் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 14 சிறுகதைகளை இந்நூல் கொண்டுள்ளது. இத்தொகுப்பிலுள்ள கதைகள் 2011ஆம் ஆண்டின் பின்னர் தாயகம் இதழிலும ஜீவநதி இதழிலும் பிரசுரமானவை. 2012இல் வெளிவந்த ‘நிமிர்வுஎன்ற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்து 11 ஆண்டுகளின் பின்னர் இத்தொகுப்பு வெளிவந்துள்ளது. தொழில்ரீதியில் அநாதரட்சகன் ஓர் ஆசிரியர். உயர்வகுப்பு மாணவர்களுக்கு பொருளாதாரத்தைக் கற்பிப்பதில் தேர்ந்தவர். பதவி நிலையால் உயர்ந்து உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியவர். அந்தத் துறைசார் அனுபவ நீட்சியாக இவர் எழுதும் கதைகள் சில எங்கள் தேசத்தின் கல்விக் கொள்கைகள், அவற்றின் அமுலாக்கல், போக்குகள் என்பவற்றை உறைப்பாக விமர்சனம் செய்பவையாக அமைந்துள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 315ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

15894 சதாயுஷ்ய மலர்: பா.சண்முகரத்ன சர்மா-ச.இராஜலட்சுமி சதாபிஷேக விழா மலர்.

வசந்தா வைத்தியநாதன் (மலர் ஆசிரியர்). கொழும்பு 10: பா.சண்முகரத்ன சர்மா, பிரதம குருக்கள், மருதானை கப்பித்தாவத்தை ஸ்ரீபால செல்வவிநாயகமூர்த்தி கோயில், மருதானை, 1வது பதிப்பு, மே 1996. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட்