ஹஸீன் ஆதம். சென்னை 600093: வேரல் புக்ஸ் வெளியீடு, 6, இரண்டாவது தளம், காவேரி தெரு, சாலிகிராமம், 3ஆவது பதிப்பு, ஜனவரி 2025. (சென்னை 600093: வேரல் புக்ஸ்).
224 பக்கம், விலை: இந்திய ரூபா 350., அளவு: 23.5×16 சமீ., ISBN: 978-624-58160-2-6.
இந்நூலில் நினைவின் கலகம், எமது வாழ்வின் இரத்த சாட்சியம், முன்குறிப்பு, இப்பதிப்புக்கானது ஆகிய ஆரம்பப் பதிவுகளைத் தொடர்ந்து, அவர் எழுதிய செங்கவெள்ளை, யாரும் உறங்கவில்லை, ஆட்கொண்டு விடுதல் அது, ஊழிக்குச் சில நாட்கள் முன்பாக, புட்டம்பை: ஈரநிலக் காதல் மருள் நீங்கக் கோரல், ஆண் சிறகுப் படபடப்பு, எனது விழியில் அலையும் உனது கூந்தல், பூனை அனைத்தும் உண்ணும், எமது பள்ளிப்போர் நாடகத்தின் தளபதி கடலின் குளம்படியோசையில் கலந்துபோனான், மூதாட்டியின் எதிரணியின் சிரம் பணிதல், சிறு பறவை உறவு வழி, புல் ஓவியம் ஆகிய கதைகள் இடம்பெற்றுள்ளன. இறுதியில் இவரது படைப்பாக்கங்கள் பற்றிய மதிப்புரைகளும் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநரான ஹஸீன் ஆதம் கிழக்கிலங்கையின் அக்கரைப்பற்றை பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது புலம்பெயர்ந்து சென்னையில் வசித்து வருகின்றார். வெற்றிமாறன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் பெற்ற இவர் முப்பதுக்கும் மேற்பட்ட ஆவணப் படங்களை இயக்கியுள்ளார். இவற்றுள் முன்னாள் போராளிகள் பற்றிய ஆவணப்படம், அம்பாறை மாவட்ட காணிப் பிரச்சினைகள் தொடர்பான ஆவணப்படம், இலங்கையில் நிகழும் சமூக வன்முறை தொடர்பான ஆவணப்படம் என்பன குறிப்பிடத்தக்கது. இவரது Broken Bond என்ற குறும்படம் அவுஸ்திரேலிய அரசின் விருதினை வென்றிருந்தது.