17695 பொன் வண்டு (சிறுகதைத் தொகுப்பு).

ஆதிலட்சுமி சிவகுமார். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

vi, 210 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-5881-47-5.

ஆதிலட்சுமி சிவகுமார் சமூக முனைப்புள்ள ஈழத்துப் பெண் எழுத்தாளர். இவர் சிறந்த பாடலாசிரியராகவும் அறியப்பட்டவர். வன்னி மண்ணிலிருந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விடுதலைப் பாடல்கள், வானொலி நிகழ்ச்சிகள், விமர்சனங்கள், நாடகங்கள் என்று பல தளங்கிலும் ஒரு சமூக விடுதலை நோக்கிய எழுத்துப் போராளியாக இயங்கிக் கொண்டிருந்தவர். 1990இலிருந்தே ‘புலிகளின் குரல்’ வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இருந்தவர். தற்சமயம் புலம்பெயர்ந்து சுவிற்சலாந்தில் வாழ்ந்து வருகிறார். 1982 இலிருந்து எழுதிவரும் இவர் 20.05.1982 அன்று ‘உரிமையில்லா உறவுகள்’ என்ற தனது முதற் சிறுகதை மூலம் இலங்கை வானொலி வாயிலாக ஆதிலட்சுமி இராசையாவாக தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர். இவரது படைப்புகள் எரிமலை, வெளிச்சம், ஈழநாதம், சுட்டும் விழி, சரிநிகர், ஞானம், வைகறை, வெள்ளிமலை, கவிதை, நாற்று, யாத்ரா போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைளிலும், இணையத்தளங்களிலும் வெளியாகி உள்ளன. நாற்பதாண்டுகள் கடந்த இலக்கியத்துறை வாழ்வில் இன்றும் இவரது ஆக்கங்கள் பல ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இத்தொகுப்பில் ஆதிலட்சுமி சிவகுமார் மீன்தொட்டி மனிதர்கள், அம்மாவின் மரணம், நிறம் மாறும் உறவுகள், அகதியானவன், முகாமில் இருப்பவன், சின்னத்தாயி, ஈன்ற பொழுதிலும், விருது, புத்தகப் பூச்சியின் தாய், செருப்புக்காரி, நத்தையாய் நகர்தல், கோவக்காரி, தாய், மனோரஞ்சிதம், முள்முடி மாதாக்கள், காலத்தைச் சுமப்பவள், உறவு, மனைவி என்ற பெண், காலத்தின் சாட்சிகள், வெளிநாட்டுக்காரன், கொடை, வேனிற்காலப் பறவைகள், பொன்வண்டு, ஆச்சி வீடு, மாற்றங்கள், கடல் மனம், காசு பணம் துட்டு, வாடகை வீடு, விட்டில்கள், தாய்மனம் ஆகிய தலைப்புகளில் எழுதிய முப்பது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 226ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

балтбет цупис

オンラインカジノ フリースピン Керамический керамогранит Балтбет цупис These are our top 100 free spins bonuses in South Africa for January. We carefully consider the casino’s reputation,

Wazamba Casino: Η Επιλογή των Επαγγελματιών

Содержимое Wazamba Casino Greece: Η Επιλογή #1 για Διαδικτυακό Καζίνο Προσφορές και Μπόνους για Έλληνες Παίκτες Ευχρηστία και Ασφάλεια στο Wazamba Casino Πολυμορφία Παιχνιδιών: Από