17698 மனதும் இடம்பெயரும்: சிறுகதைகள்.

நிவேதா உதயராஜன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

120 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-24-5.

புலம்பெயர் தமிழ் மக்களின் தனியாள் அனுபவங்களும் கலாசாரச் சிதைவுகளும் வாழ்வியற் கோலங்களும் அரசல் புரசலாக புனைவுகளில் வெளிவரத் தொடங்கியமையின் வெளிப்பாடாகவே நிவேதாவின் இந்தத் தொகுதியில் அடங்கிய கதைகளிலும் பெரும்பாலும் முகங் காட்டுவதை இனங்காண முடிகின்றது. இத்தொகுப்பில் அந்த மனிதன், சீதனம் வேண்டாம், தண்டனை, அவனும் அவர்களும், தானம் நீ, நான் வசந்தன், மருந்தே இல்லாத நோய், மன வாழ்வு, மனக்குரங்கு, பககத்து வீடு ஆகிய பத்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. நூலின் மேலட்டையில் ‘மனமும் இடம்பெயரும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 306ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்