17702 முதற்பரிசு: மனவெளிச் சிறுகதைகள்.

செல்லையா மோகநாதன். வவுனியா: மனவெளி பதிப்பகம், இல. 35, A/5, மாதிரி உறைவிட வீதி, குருமண்காடு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி).

146 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ.

பாடசாலை அதிபராகப் பணியாற்றும் செல்லையா மோகநாதனின் நீண்டகால அனுபவமும், கிராமியச் சூழல் சார்ந்த அவரது வாழ்வும், அவரது ஆக்கங்களுக்குப் பின்புலமாக அமைந்துள்ளன. ‘கமத்தொழில் விளக்கம்’ சஞ்சிகையில் தனது 12ஆவது வயதில் 1973இல் ‘கமத்தொழில் விளக்கம் கற்றிடுவீர்’ என்ற தலைப்பிலான கவிதையுடன் இலக்கிய உலகில் காலடிவைத்தவர். தனது 16ஆவது வயதில் அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்டு’விழுதுகள்’ என்ற சிறுகதையை எழுதி முதலிடம் பெற்றிருந்தார். இவரது ஆக்க இலக்கிய படைப்பாக்கங்கள் ஈழநாடு, மித்திரன், முரசொலி, ஈழமுரசு, உதயன், வீரகேசரி என்று தேசிய, பிராந்தியப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. சமர், அரைநாள் விடுப்பு, மணிவிழா, ஹே ஹனுமான்!, பரிசுகள், யானைப்பாகன், பேதைமையும் மேதைமையும், இடமாற்றம், மறக்குமா மங்கை நெஞ்சம், புதிய உறவுகள், முதற் பரிசு, தாக்கமும் மறு தாக்கமும், ஒத்தடம், வீரவாலி, தூவானம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 15 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 110041).

ஏனைய பதிவுகள்

15192 மோடியின் இலங்கைப் பயணமும் மலையகமும்.

சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 15 பக்கம், விலை: ரூபா 20.00,