ஐ.சாந்தன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2023. (சென்னை 600018: கிளிக்டோ பிரின்ட், ஜலீல் டவர், 42, மு.டீ.தாசன் வீதி, தேனாம்பேட்டை).
240 பக்கம், விலை: இந்திய ரூபா 300., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-19034-11-6.
தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தம் சொந்த அனுபவங்களினுடாக வெளிப்படுத்தும் ஐ.சாந்தன், சமநிலை வழுவாமல் அதைச் செய்திருக்கிறார். ஒடுக்குமுறைகளால் வடிவமைக்கப்பட்ட ஈழத் தமிழ் வாழ்வின் அரை நூற்றாண்டுக் கால அற்புதச் சித்திரிப்புகளை இந்த நூலில் காணலாம். சாந்தனின் பார்வை கூர்மையான அவதானிப்புகளைக் கொண்டிருந்தாலும் தீவிரமான அரசியல் நிலைப்பாடுகளை இயல்பாகவே தவிர்த்துவிடுகின்றது. எந்த ஒரு பிரச்சினையையும் மக்கள் தரப்பில் நின்று அணுகுவது இவரது கதைகளின் தனித்தன்மையாகும். ‘நாவலாய் நீளும் நெடுங்கதைகளாக’ கிருஷ்ணன் தூது, மனிதர்களும் மனிதர்களும், ஆரைகள், உறவுகள் ஆயிரம், தேடல், எழுதப்பட்ட அத்தியாயங்கள், அசோகவனம் அல்லது வேலிகளின் கதை, அடையாளம் ஆகிய தலைப்புகளில் வெவ்வேறு காலப்பகுதிகளில் சாந்தன் எழுதிய ஒரு நாவலின் பகுதிகளை மீண்டும் ஒருங்கிணைத்து முழுமைப்படுத்தியிருக்கிறார். இந்தப் பகுதிகள், தான் பிறந்த மண்ணை விட்டகலாத ஒரு மனிதரின் தொடர்கதைகளாக அமைந்திருப்பதால் இந்த மறு வடிவமைப்பு சாத்தியமாகியிருக்கின்றது.