நிலாவெளியூர் கெஜதர்மா (இயற்பெயர்: கெஜரெத்தினம் தர்மகுலராசா). திருக்கோணமலை: நிலாவெளியூர் கெஜதர்மா, தபாற்கந்தோர் வீதி, 2ஆம் வட்டாரம், நிலாவெளி 2, 1வது பதிப்பு, மார்கழி 2017. (திருக்கோணமலை: அம்மா பதிப்பகம், யு.சு.வுசயனைபெ, 31/1, சமாது ஒழுங்கை).
98 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ.
இனத்துவேஷம் சிங்களவர்களுக்கு மட்டுமானதல்ல. அது தமிழர்களுக்கும் பொதுவானது. அந்த மூன்று நாட்களும் கருணைவடிவில் அந்த சிங்களத் தாதியும், நேயம் மிக்க சிங்கள இராணுவ வீரர்களும் கதாநாயகன் குலனின் மனதில் தெய்வமாகத் தெரிந்தார்கள். ஏன் என்பது தான் இக் கதை. நிலாவெளிப் பிரதேசத்தில் 1985 வைகாசி 29இல் ஏற்பட்ட துயர் நிகழ்வுகளின் கதை. அந்த மூன்று நாட்கள் குலனின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் இக்கதையில் சொல்லப்படுகின்றது. இந்நாவலில் சொல்லப்பட்டுள்ள செய்தி ஒரு போர்க் காலகட்டத்தில் தமிழ் மண்ணில் நடந்தேறிய நிகழ்வுகளின் பதிவு. ஒரு சமூகத்தையே வீழ்த்தி வறுமையிலும், துன்பத்திலும் அவர்களை வாட்டிய சோக நிகழ்வுகளின் பதிவு. அம்மா பதிப்பகத்தின் 26ஆவது வெளியீடாக வெளிவந்துள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 78782).