17725 அம்மாயி கல்லு.

மாலதி பாலேந்திரன். மல்கெலியா: மாலதி பாலேந்திரன், களனிவத்தை, 1வது பதிப்பு, ஜுலை 2006. (சென்னை 600 017: திருமகள் நிலையம், புதிய எண் 16, பழைய எண் 55, வெங்கட் நாராயணா வீதி, தியாகராய நகர்).

112 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 55.00, அளவு: 21×13 சமீ.

மூன்று தலைமுறைகளாகத் தோட்டத் தொழிலாளர்களிடையே ஏற்பட்டுவந்த வாழ்வியல் மாற்றங்களை சுவைபட விபரிக்கும் நாவல். மீனாட்சி என்ற பெண் தோட்டத் தொழிலாளி, அவளது குடும்பம், பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரர்கள் இவர்களைச் சுற்றி நாவல் நகர்கின்றது. கம்பனிக் காலத்திலிருந்து இன்றைய காலகட்டம் வரை தோட்டத்து மக்களின் நடையுடை பாவனைகளில் ஏற்பட்டு வந்த மாற்றங்களை மீனாட்சிக்கு எண்பத்தைந்து வயதாகி எல்லோரும் அம்மாயி என்று அழைக்கும் நிலைமை வரை கதை நகர்கிறது. மனித உறவுகளினால் ஏற்படும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் இக்கதையில் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்நாவலில் ஏறத்தாள 100 வருடங்களுக்கு முற்பட்ட காட்சிகளை புகைப்படங்களின் வாயிலாக தேடித்தொகுத்துள்ளார். (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16707).

ஏனைய பதிவுகள்