17730 அன்புடையர் என்பும் உரியர் பிறர்க்கு.

ஆ.மு.சி.வேலழகன் (இயற்பெயர்: ஆதிமுத்து சின்னத்தம்பி வேல்முருகு). மட்டக்களப்பு: ஆ.மு.சி.வேலழகன், கலைமகள் இல்லம், வள்ளுவன் மேடு, திருப்பழுகாமம், பெரிய போரதீவு அஞ்சல், 1வது பதிப்பு, கார்த்திகை 2021. (மட்டக்களப்பு: அட்சயன் அச்சகம், பிரதான வீதி, கொக்கட்டிச்சோலை).

xvi, 126 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-98190-0-9.

இந்நாவலானது மட்டக்களப்பு மண்ணில் நாம் மகிழ்வுடன் அனுபவித்த விவசாயம் சார்ந்த வாழ்வியல் அம்சங்களினூடாகவும் இனத்துவ விரிசலற்ற மனித உறவுகளினூடாகவும் சஞ்சாரம் செய்கின்றது. இந்நாவலின் எட்டு அத்தியாயங்களின் தலைப்புகளுமே எமக்கு கதையை ஊகிக்க வைத்துவிடுகின்றன. மாணிக்கப்பிள்ளை வட்டவிதானை, அவரது பிள்ளைகள், நுரைச்சோலை வயல் உருவாகிய வரலாறு, அதன் இயற்கை அழகு, வயலும் வயல் சார்ந்த சட்டதிட்டங்களும்/ கல்லோடையும் குளத்தின் இட அமைவும், அதன் உருவாக்கத்தின் படிமுறைகளும், அதனை உருவாக்க முன்நின்றவர்களும் அவர்களது பங்களிப்பும், குளத்திற்கு நீர் நிரப்புதலும்/ மௌலானாவினது வாழ்வும் அவரினது நாட்டின் வரலாறும், அதனோடிணைந்த வட்டவிதானையாரினதும் அவரது குடும்பத்தினரினதும் தொடர்புகளும்/ மாணிக்கம்பிள்ளை-ஞானம்மா திருமண வாழ்வும் மௌலானாவின் கடை வட்டவிதானையாரினது ஊரில் திறத்தலும், திஸ்ஸஹாமி அவர்களது குடும்பத்தினரின் தொடர்பும்/ திஸ்ஸஹாமியினதும் இனத்தவர்களது வாழ்வும் வழக்கங்களும், வட்டவிதானையாரினதும் திஸ்ஸஹாமி அவர்களது குடும்பத்தினரின் வாழ்க்கைப் பிணைப்பும்/ கல்லோடைக் குளத்தின் நன்மைகளும் நுரைச்சோலை வயல்வட்டைகளின் வனப்பும் லொக்கு மெனிக்கேவுக்கும் மாணிக்கப்பிள்ளை வட்டவிதானையார் குடும்பத் தொடர்பும்/ நுரைச்சோலை வட்டை எனப் பெயர் வரக் காரணமும் நுரைப்பழத்தின் வரலாறும், மாணிக்கப்பிள்ளையின் திடீர் சுகவீனமும் மௌலானா கடறப்பா வள்ளம் வாங்குவதற்கான ஏற்பாடுகளும்/ சிவநாயகம், லொக்கு மெனிக்கே ஆகியோருக்கான திருமண ஏற்பாடுகளும் அதற்கு முன் பின்னான வேலைகளும் என ஒவ்வொரு அத்தியாயத் தலைப்பும் நீண்டவை. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 93811).

ஏனைய பதிவுகள்

15959 ஜீவநதி: அ.யேசுராசா சிறப்பிதழ்: இதழ் 156, ஆவணி 2021.

க.பரணீதரன் (ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆவணி 2021. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், இல. 10, முருகேசர் ஒழுங்கை,

16434 மகாபாரதக் கதைகள் : கண்ணன் விடு தூது.

ஒமேகா. கொழும்பு 15: ஒமேகா வெளியீடு, ஒமேகா கணித விஞ்ஞான வளநிலையம், 478/31B, அளுத்மாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை). 76 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5