17733 ஆறாத வடு.

கவிஞர் முல்லை (இயற்பெயர்: முருகையா சதீஸ்). யாழ்ப்பாணம்: தமிழியற் கழக வெளியீடு, தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, தை 2023. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

ix, 104 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 21×14 சமீ., ISBN: 978-624-99407-3-4.

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், திருக்கோணமலை, திரியாய் கிராமத்தை வாழ்விடமாகவும் கொண்டவர் முருகையா சதீஸ். இவர் 2022இல் வெளியிட்ட ‘கண்ணீரில் கரைந்த தேசம்’ என்ற நாவலையடுத்து வழங்கியுள்ள இரண்டாவது நாவல் இதுவாகும். திருக்கோணமலையிலிருந்து எழுந்துள்ள ஈழத்துப் போரியலைப் பேசும் நாவல் என்ற வகையில் இது வித்தியாசமான வாசிப்பு உணர்வினை வழங்குகின்றது. இந்நாவல் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்ட ஆயுதப்போராட்டத்திற்குப் பின்னரான மக்களின் தடுப்பு முகாம் வாழ்க்கையை மையப்படுத்தியதாகும். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியன்று, முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலை அடுத்த வட்டுவாகல் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக வவுனியா-செட்டிகுளம் பகுதிகளில் அமைந்திருந்த பல்வேறுபட்ட தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு, இறுதியில் திரியாய்க் கிராமத்துக்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்டமையை, ஒரு கதைசொல்லியாக நின்று, ஆசிரியர் தன்மை நிலையில் நின்று கூறியிருக்கிறார். இதில் போருக்குப் பின்னர் தடுப்பு முகாம்களில் வாழ்ந்த ஒட்டுமொத்த வன்னி மக்களின் துயர் தாங்கிய வாழ்வின் அவலங்களைப் பேசியிருக்கிறார்.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ் சிறப்புப் பட்டதாரியான சதீஸ், அங்கு உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 115504).

ஏனைய பதிவுகள்

17736 இதயத் துடிப்பாய் காதல்.

நிதனி பிரபு. சென்னை 14: அருண் பதிப்பகம், எண். 107/8, கௌடியா மடம் சாலை, இராயப்பேட்டை, 1வது பதிப்பு, ஜனவரி 2016. (சென்னை 2: பத்மாவதி ஓப்செட்). 476 பக்கம், விலை: இந்திய ரூபா