குணா கவியழகன்;. தமிழ்நாடு: எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 642 002, 1வது பதிப்பு, ஜ{லை 2024. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).
736 பக்கம், விலை: இந்திய ரூபா 900., அளவு: 22.5×15 சமீ., ஐளுடீே: 978-81-19576-19-7.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குணா கவியழகன் இளம் வயதிலிருந்து ஈழ விடுதலைப் போராட்ட அரசியலில் பயணிப்பவர். தற்போது புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து வருகின்றார். ‘நஞ்சுண்ட காடு”, ‘அப்பால் ஒரு நிலம்’, ‘விடமேறிய கனவு’ ஆகிய மூன்று நாவல்களை இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நாவல்கள் முறையே போருக்குப் போனவனின் கதையாக, போரில் களமாடுபவனின் கதையாக, போரில் தோற்கடிக்கப்பட்ட கைதியின் கதையாக என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. குணா கவியழகன், ஊடகப் பணிப்பாளராக, அரசியல் ஆய்வாளராக, எழுத்தாளராக தமிழ்ப் பரப்பில் நன்கு அறியப்பட்டவர். 500இற்கும் மேற்பட்ட அரசியல், இராணுவ, சமூகக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஐந்து நாவல்களையும் சில சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். இலக்கியத்துறையில் தனது முதல் நாவலுக்கு கனடா இலக்கியத் தோட்டம் இயல் விருதைப் பெற்றிருந்தார். மேலும் காக்கைச் சிறகினிலே விருது, அமுதன் அடிகளார் விருது, வாசக சாலை விருது, தமிழ்நாடு பதிப்பாளர் சங்கத்தின் விருது போன்றன இவரது நாவல்கள் பெற்ற தமிழக விருதுகளாகும்.