17769 குளக்கோட்டன் சித்திரம்.

கனகசபாபதி சரவணபவன். திருக்கோணமலை: திருகோணமலை வெளியீட்டாளர்கள், 346, அன்புவழிபுரம், 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

80 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5  சமீ., ISBN: 978-955-38500-1-0.

வரலாற்று இயக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் வரலாற்றுப் புனைவுகளை எழுதிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் இந்நூல் எழுத்தாளர் சரவணபவனால் எழுதப்பட்டுள்ளது. குளக்கோட்டன் என அழைக்கப்படும் சோழகங்கன் கோணேஸ்வர ஆலயப் புனரமைப்புப் பணிக்காக தந்தை வரராமதேவரால் மதுரையில் இருந்து திருக்கோணமலைக்கு அனுப்பப்பட்டவர். அவரது வருகைக்காலம் குறித்து வரலாற்றாய்வாளரிடையே ஒருமித்த முடிவு இன்னும் எட்டப்படவில்லை. எனினும் ’கோணேசர் கல்வெட்டு என்னும் இலக்கிய வடிவம் 12ஆம் நூற்றாண்டுக்குரியதாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகின்றது. இப்புனைவானது அக்காலச் சமூகச் சூழலைக் கருத்தில் கொண்டு நாககன்னி, காயத்ரி, சம்பந்தர், காடுசூழ் பயணம், கந்தளாய், சதுர்வேதி மங்கலம், மறுநாள், குளம் அமைத்தல், குசவர் மேடு, திட்டமிடல், பொன்னி, குளப்பலி ஆகிய பன்னிரு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

14515 தமிழ் மரபில் நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் நடிப்புப் பண்பாடு.

பால. சுகுமார். சென்னை 600020: உயிர்மை பதிப்பகம், எண். 5, பரமேஸ்வரி நகர் முதல் தெரு, அடையார், 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (சென்னை 600077: மணி ஓப்செட்). (16), 17-54 பக்கம், புகைப்படங்கள்,