அ.இரவி (இயற்பெயர்: இரவி அருணாசலம்). நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2024. (சென்னை 600018: கிளிக்டோ பிரின்ட், ஜலீல் டவர், 42, K.B.தாசன் வீதி, தேனாம்பேட்டை).
344 பக்கம், விலை: இந்திய ரூபா 430., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-6110-092-5.
இந்திய அமைதி காக்கும் படை (IPKF) இலங்கையில் புகுந்த நாளிலிருந்து எமது மண்ணைவிட்டு வெளியேறிய நாள் வரை, ஈழத்தின் மண்ணுக்கும் மக்களுக்கும் நிகழ்ந்ததைச் சித்திரிக்கும் படைப்பு இது. இந்தியாவை நட்பு நாடாகவே கருதி வந்த ஈழத் தமிழர்களின் எண்ணம் இதன் பிறகு மாறியதாகவே பலரும் கருதுகிறார்கள். இந்திய அமைதிப் படை ஈழத்தில் தங்கியிருந்த காலத்தின் நிகழ்வுகளைச் சொல்லும் இந்த நாவல் அதனால் ஈழத் தமிழர் மனங்களிலும் வாழ்விலும் ஏற்பட்டுவிட்ட நிரந்தரமான மாற்றங்களை அடையாளம் காண முயல்கின்றது. ஒரு காலத்தின் வரலாற்றுப் பதிவை கலாபூர்வமான கண்ணோட்டத்துடன் முன்வைக்கும் இரவி அருணாசலம் ஈழத் தமிழரின் வாழ்வையும் வரலாற்றையும் புனைவின் வழி ஆவணப்படுத்தி வருகிறார். இது அவரது ஐந்தாவது நாவல்.