இராஜினிதேவி சிவலிங்கம். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
36 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18×13 சமீ., ISBN: 978-955-0958-44-3.
யாழ்ப்பாணத்தை ஆட்டிப்படைத்த ஒரு காலகட்ட சாதியப் பேயின் தாண்டவத்தைக் கூறும் குறுநாவல். றஞ்சினி, பாரதி, மாலதி, சுவர்ணா ஆகிய நான்கு பள்ளித்தோழிகளில் ஒருத்தியான மாலதியையும் அவர்களுக்கிடையே இருந்த சாதி வேறுபாட்டைக் கடந்து இணைந்த நல்லையா விதானையாரின் மகன் ராகவன் ஆகிய இரு இளையோரைச் சுற்றி நிகழும் கதை. இக்குறுநாவலின் கதைசொல்லியாக றஞ்சினி வடிவமைக்கப்பட்டுள்ளர். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 317ஆவது நூலாக வெளிவந்துள்ளது.