17813 சொல்ல வேண்டிய கதைகள் (புனைவுசாராத இலக்கியம்).

லெ.முருகபூபதி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

vi, 134 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-68-8.

இதிலுள்ள கட்டுரைகள் ஜீவநதி இதழ்களில் 2013 தை மாதம் தொடக்கம் 20 இதழ்களில் தொடராக வெளிவந்தவை. முருகபூபதி  தனது வாழ்வில் சந்தித்த மனிதர்கள், தன் வாழ்வியலுடன் தொடர்புடைய நிகழ்வுகள், மனதில் பதிந்த நிகழ்வுகள், சமூகத்திற்கு நன்மை பயக்கும் விடயங்களை சுவையான மொழிநடையில் தந்திருக்கிறார். எழுத்தாளர் லெ.முருகபூபதி, நீர்கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது அவுஸ்திரேலியாவில் தனது குடும்பத்தினனருடன் மெல்பர்ன் நகரில் வாழ்ந்து வருகின்றார். ஏற்கெனவே ‘சொல்ல மறந்த கதைகள்’ என்ற தலைப்பில் 2014இல் இவரது நூலொன்று வெளிவந்திருந்தது. அதில் இலக்கியத்துடன் அரசியல் நெடியும் சேர்ந்திருந்தது. ‘சொல்ல வேண்டிய கதைகளில்’ தன் குடும்பத்தில், சுற்றத்தில், நட்புகளில், ஆழ்ந்து நேசிக்கின்ற குழந்தைகளில் மற்றும் அவர் அங்கம் வகிக்கும் அமைப்புகளில் கற்றதையும் பெற்றதையும் பொலிஸ்காரன் மகள், குலதெய்வம், யாதும் ஊரே, நாற்சார் வீடு, ஊருக்குப் புதுசு, மனைவி இருக்கிறாவா?, திசைகள், காவியமாகும் கல்லறைகள், எங்கள் நாட்டில் தேர்தல், தனிமையிலே இனிமை, படித்தவற்றை என்ன செய்வது?, வீட்டுக்குள் சிறை, நடைப் பயிற்சி, கனவுகள் ஆயிரம், நம்பிக்கை, ஸ்கைப்பில் பிள்ளை பராமரிப்பு, துண்டு கொடுக்கும் துன்பியல், பேனைகளின் மகாத்மியம், இயற்கையுடன் இணைதல், இலக்கியத்தில் கூட்டணி ஆகிய 20 தலைப்புகளில் பதிவுசெய்துள்ளார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 82ஆவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 98249).

ஏனைய பதிவுகள்

16481 இனி வரும் நாட்களெல்லாம்.

என்.நஜ்முல் ஹீசைன். கொழும்பு 7: ஸ்ரீலங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்றம், 93, ராஜகீய மாவத்தை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ்). 136 பக்கம், விலை: ரூபா 450., அளவு:

14139 திருக்கோணமலை இளைஞர் அருள்நெறி மன்றம்: 25ஆவதுஆண்டு நிறைவு வெள்ளிவிழா மலர்

மலர்க்குழு. திருக்கோணமலை: இளைஞர் அருள்நெறி மன்றம், ஞானசம்பந்தன் வீதி, 1வது பதிப்பு, 1980. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம், 575, காங்கேசன்துறை வீதி). (58), 60 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×22

16201 நிவேதினி: பால்நிலைக் கற்கை நெறிச் சஞ்சிகை : இதழ் 19 (2020-2021).

செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 6 : பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58 தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). (6),