17821 பாரதியில் வெளிப்படும் வள்ளுவம்: பாரதி கவிதையில் குறளின் தாக்கம்.

இ.சத்தியமலர். யாழ்ப்பாணம்: கே.ஏ.எஸ்.சத்தியமனை நூலகம், தொல்புரம் மேற்கு, சுழிபுரம், 1வது பதிப்பு, மாசி 2025. (யாழ்ப்பாணம்: நியூ எவகிரீன் அச்சகம், 693, காங்கேசன்துறை வீதி).

60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×11.5 சமீ., ISBN: 978-624-93930-9-7.

தமிழுக்குக் கதி என்று கம்பரையும், திருவள்ளுவரையும் சொல்வதுண்டு. அத்தகைய திருவள்ளுவர் மீது பாரதிக்குத் தாக்கம் ஏற்பட்டதில் வியப்பில்லை. இடைக்காலத்தில் (1910) வள்ளுவரை, தெய்வ வள்ளுவன் வான் மறை செய்ததும்  எனப் போற்றிய பாரதி, பிந்தைய காலங்களில் (1919) வள்ளுவர் குறித்த கருத்து வளர்ச்சியில், ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ எனவும் (1919) ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை’ எனவும் பாடிப் போற்றினார். ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்’ என்ற வள்ளுவர், பிச்சைக்காரர் வாழும் நாட்டைப் படைத்தவன், கெட்டு ஒழியட்டும் என்று அறச்சீற்றம் கொள்கிறார். அதையெ பின்னாளில் பாரதி ‘தனியொருவனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்கிறார். இத்தகைய பின்புலத்தில் நின்று இளையோரின் நல்லறிவு விருத்தியை நோக்காகக் கொண்டு இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Anstifte bred Jackpot 6000

Content Forstå volatilitet inni spilleautomater: ultra sevens Casinobonus Tandempartner Online Finden The #1 Language Trade App Spilleautomater påslåt nett hos Mr Green bred eller med