17825 வரதர் கட்டுரைகள் (வரதர் நூற்றாண்டு வரிசை-03).

க.பரணீதரன், தி.கோபிநாத் (தொகுப்பாசிரியர்கள்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

104 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-39-3.

இத்தொகுப்பில் வரதர் (தி.ச.வரதராசன்) எழுதிய 22 கட்டுரைகள்; இடம்பெற்றுள்ளன. இவை பேச்சுத் தமிழ், மறுமலர்ச்சியும் நானும், நான் ஒரு அச்சக முகாமையாளன், பண்டிதமணி அவர்கள் அனுப்பிய திருமண வாழ்த்து, வழி வழி கம்பர், கீரிமலை பெற்ற பாக்கியம், இலக்கியமும் அவனும், தமிழ்நாட்டில் கண்டதும்-கேட்டதும், எழுதத் துடிக்கும் இளையவர்க்கு, இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு ஒலி, ஒரு நல்ல இலக்கியம், அ.செ.முருகானந்தம், மறுமலர்ச்சிக் காலத்து மறக்கமடியாத நண்பர், ஆழமான இலக்கியம், இலக்கிய கலாநிதியும் இரசிகமணியும், ஈழத்துப் பெண்ணுலகில் சுடர்விடும் இலக்கியமணி திருமதி பத்மா சோமகாந்தன், ஈழத்தின் மூத்த தமிழ் மறுமலர்ச்சி எழுத்தாளர் சோ.சிவபாதசுந்தரம், க.கைலாசபதி, தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி யாழ். பல்கலைக்கழகத்தின் ‘கலாநிதி’ ஆகியுள்ளார். தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவர், புலவர் நினைவு, பெருமை தரும் ‘நந்தி’ ஆகிய தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன. வரதர் என அழைக்கப்படும் தி. ச. வரதராசன் (தியாகர் சண்முகம் வரதராசன்) (ஜூலை 1, 1924 – டிசம்பர் 21, 2006), சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் பலதுறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்தவர். ஈழத்து இலக்கியத்தில் மறுமலர்ச்சி எழுத்தாளர் என அழைக்கப்பட்டவர். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 415ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

மேலும் பார்க்க:

ஒளிரும் நட்சத்திரங்கள்: தொகுதி 2. 17931

நவாலியூர் க.சோமசுந்தரப் புலவரும் அவர் இயற்றிய பிரபந்தங்களும். 17942

நெய்தல் கரையோரம்: கவிதைகள், கட்டுரைகள். 17563

ஏனைய பதிவுகள்