17831 மணிமேகலையும் பண்பாட்டுக் கோலங்களும்: ஆய்வரங்கச் சிறப்பு மலர் -2023.

ஸ்ரீபிரசாந்தன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம், 4ஆம் மாடி, 180, T.B.ஜாயா மாவத்தை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

vii, 156 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ.

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டுதோறும் நடத்திவரும் ஆய்வரங்குகளின் மையப்பொருளாக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் அமையப்பெற்றுள்ளன. தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம், 11ஆம் திருமுறைப் பிரபந்தங்கள், திருத்தொண்டர் புராணம் என்பன முன்னைய ஆய்வரங்குகளில் மையப்பொருளாக இடம்பெற்றிருந்தன. இவ்வாண்டு இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான ‘மணிமேகலையில் பண்பாட்டுக் கோலங்கள்’ என்பது ஆய்வுக்கான மையப்பொருளாக அமைகின்றது. உலகில் பசிப்பிணி அறவேண்டும் என்ற உயரிய நோக்குடன் படைக்கப்பட்ட மணிமேகலையைப் பண்பாட்டியல் நோக்கில்  அணுகும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கக் களமமைந்த மேற்படி ஆய்வரங்கினையொட்டி மணிமேகலை தொடர்பாக முன்னர் எழுதப்பட்டிருந்த இருபது அரிய கட்டுரைகளைத் தொகுத்து ஆய்வரங்கச் சிறப்பு மலராக வெளியிட்டுள்ளனர். மணிமேகலையின் காலம் (மு.கோவிந்தசாமி), கதைச் சுருக்கம் (சாமி சிதம்பரனார்), மணிமேகலை பற்றி ஓரு அறிமுகம் (கே.டி.கே.தங்கமணி), காப்பிய நோக்கு (அழ.பழநியப்பன்), தலைமைப் பாத்திரம் (சோம.இளவரசு), மணிமேகலையில் அறவணவடிகள் (உ. பழநி), மணிமேகலைப் பாத்திரப் பெயர்கள் (அ.ஞானப்பிரகாசம்), மணிமேகலையில் அரசர்கள் (சுப.இராமநாதன்), மணிமேகலைத் தெய்வங்கள் (துரை. பட்டாபிராமன்), பௌத்தம் கூறும் அறம் (இரத்தின வேங்கடேசன்), மணிமேகலையிற் சைவம் (க.வெள்ளைவாரணம்), மணிமேகலையில் நம்பிக்கை, பழக்கவழக்கங்கள் (சாமி. சிதம்பரனார்), மணிமேகலையில் சிலப்பதிகாரச் செய்திகள் (கொ.இலக்குமணசாமி), சாத்தனாரும் இளங்கோவும் (சாமி.சிதம்பரனார்), மணிமேகலையும் திருக்குறளும் (கே.டி.கே.தங்கமணி), மணிமேகலையில் மனித அன்பு (கே.டி.கே. தங்கமணி), மணிமேகலையில் அளவையியல் (பா.ஆனந்தகுமார்), தொல்லியல் நோக்கில் இரட்டைக் காப்பியங்கள் (ந.அதியமான்), மணிமேகலை மொழியியல் (வ.சுப. மாணிக்கம்), மணிமேகலைப் பதிப்பு (ச.மெய்யப்பன்) ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Tragamonedas 3d Nuevas De balde Online

Content Visita este sitio web: Necesito Registrarme De Participar Tragamonedas Vano? Blackjack Free Online Online Casino Hearts Of Venice En internet Game No Packages Inspeccionar

17589 வனப்பு: கவிதைத் தொகுதி.

சூரியநிலா (இயற்பெயர்: ஆ.ஜென்சன் றொனால்ட்). தென்மராட்சி: அன்சன் கலையகம், உசன், 1வது பதிப்பு, ஜ{லை 2023. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை). 70 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: