17843 சட்டநாதனின் கலையும் வாழ்வும்.

க.சட்டநாதன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, வைகாசி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

viii, 120 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-92-5.

இந்நூலில் சட்டநாதன், அவரது படைப்பாக்கங்கள் என்பவை பற்றிய 21 ஆக்கங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. சட்டநாதனின் திசைகளும் தடங்களும் (தெ.மதுசூதனன்), சட்டநாதனின் படைப்புலகில் சமூகச் சூழல் (எம்.வேதசகாயகுமார்), சட்டநாதனின் சிறுகதைகள் (ஏ.ஜே.கனகரத்தினா), தமிழில் உலாவரும் உன்னதமான சிறுகதைத் தொகுதி (சி.சிவசேகரம்), க.சட்டநாதன் படைப்புத் தளம்-ஒரு பார்வை (வே.ஐ.வரதராஜன்), ஒரு புதிய அறிமுகம்: இரண்டு பழையவர்கள் (வெங்கட சாமிநாதன்), சட்டநாதனின் சிறுகதைகள் பணிய மறுப்பவர்களின் குரல்கள் (ஜிஃப்ரி ஹாஸன்), சட்டநாதனின் புதியவர்கள்: வாழ்க்கையை ஆமோதிக்கும் கதைகள் (ஆரபி), சட்டநாதனின் சிறுகதைகள் (என்.கே.எம்.), சட்டநாதனின் ‘புதியவர்கள்’ (முருகேசு ரவீந்திரன்), நீளும் பாலை: சட்டநாதன் எனும் ஆண்மொழிதல் (ந.மயூரரூபன்), க. சட்டநாதனின் படைப்புலகம்: ‘சட்டநாதன் கதைகள்’ தொகுதியை முன்வைத்து (தெளிவத்தை ஜோசப்), நீர் மேட்டில் தளம்பும் இலை: க.சட்டநாதன் கவிதைகள் (கருணாகரன்), சட்டநாதனின் மாற்றம் (அருண்மொழிவர்மன்), சட்டநாதனின் மாற்றம்- சிறுகதை (அனோஜன் பாலகிருஷ்ணன்), சட்டநாதனின் பொழிவு (ராதேயன்), சட்டநாதன் கதைகளில் போரும் வாழ்வும் (எம்.ஏ.நுஃமான்), க.சட்டநாதன்  புனைவுகளில் பெண், குழந்தைகள் (தி.செல்வமனோகரன்), பலரது பார்வைகள், கடிதம் (வ.இராசையா), கடிதம் (அம்பை) ஆகிய தலைப்புகளில் இவ்வாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71349).

ஏனைய பதிவுகள்

On the web Blackjack Uk

Posts Black-jack Winner The new Science Trailing Black-jack: Just how Probability Shapes The Wins Lower Minimal Put Casinos: Initiate Having fun with Only ten Video: