17870 கொழும்புத் தமிழ்ச் சங்க நிறுவுநர் தினம்-2012: சங்கச் சான்றோர் விருது பெற்ற செம்மல்கள்.

 தம்பு சிவசுப்பிரமணியம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6:  கற்பகம் இலக்கியச் சோலை, இணை வெளியீடு, கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, 57வது ஒழுங்கை ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், 14, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை).

16 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

2012ஆம் ஆண்டில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஒழுங்குபடுத்தியிருந்த தமிழ்ச் சங்க நிறுவுநர் தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட சங்கச் சான்றோர் விருதினைப் பெற்றுக்கொண்ட  ஐவரான கலாநிதி செல்வி திருச்சந்திரன், பேராசிரியர் சோ.சந்திரசேகரம், செல்வி சற்சொரூபவதி நாதன், திரு.சோமசுந்தரம் பரமசாமி, திரு. சிவராசசிங்கம் கந்தசாமி ஆகியோர் பற்றிய வாழ்க்கைக் குறிப்பினை தம்பு சிவசுப்பிரமணியம் இந்நூலில் எழுதித் தொகுத்து வழங்கியுள்ளார். இப்பிரசுரத்தை ‘கற்பகம் இலக்கியச் சோலை’ என்ற அமைப்பு பிரசுரித்திருந்தது.

ஏனைய பதிவுகள்

17625அப்பாவின் டயரி: சிறுகதைகள்.

எஸ்.ஏ.கப்பார். மருதமுனை 3: வெண்ணிலா பதிப்பகம், 378/2, ஸம்ஸம் வீதி, 1வது பதிப்பு, ஜூலை 2024. (மருதமுனை: ஜெஸா கிரப்பிக்ஸ், இல.281, பிரதான வீதி). vi, 98 பக்கம், விலை: ரூபா 500., அளவு: