17875 இலங்கை இதழியலில் சிவகுருநாதன்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: வசந்தம் வெளியீட்டகம், இல. 19, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xviii, 262 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 1500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-94753-0-4.

இலங்கை பத்திரிகையியலில் வரலாற்றுச சாதனை படைத்த அமரர் இரத்தினதுரை சிவகுருநாதன் (1931-2003) அவர்களின் மறைவின் இருபதாம் ஆண்டு நினைவாக வெளியிடப்பெற்ற இந்நூலில் அமரர் சிவகுருநாதன் பற்றி பல்வேறு அறிஞர்களின் நினைவுப் பதிகைகளும், அமரர் சிவகுருநாதன் அவர்களுக்கான அஞ்சலிகளும், ஆராதனைகளும், கவிதாஞ்சலிகளும் தொகுக்கப்பெற்றுள்ளன. முதலாவது பிரிவில் அமரர் சிவகுருநாதன் பற்றிய திறனாய்வுகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் எஸ்.திருச்செல்வம், லெ.முருகபூபதி, வீரகத்தி தனபாலசிங்கம், தி.ஞானசேகரன், வி.ரி.இளங்கோவன், தே.செந்தில்வேலவர், ச.சுந்தரதாஸ், கா.சிவத்தம்பி, ராஜாஜி ராஜகோபாலன், கார்த்திகா கணேசர், கோவிலூர் செல்வராஜன், திக்குவல்லை கமால், அ.பஞ்சாட்சரம், செல்லத்தம்பி மாணிக்கவாசகர், டொமினிக் ஜீவா, செல்லப்பா நடராசா, நடராசா சரவணன், என்.எம்.அமீன், உடுவை எஸ்.தில்லைநடராஜா, ஏ.எச்.எம்.நவாஸ், வ.ந.கிரிதரன், மேமன்கவி, ரூபன் மரியராஜன், வரதன் கிருஷ்ணா, எஸ்.எம்.வரதராஜன், ராஜன் வடிவேல், கே.பொன்னுத்துரை, கே.எஸ்.சிவகுமாரன், வெற்றிவேலு சபாநாயகம், கார்த்திக், அஜித் சமரநாயக்க ஆகியோர்  32 கட்டுரைகளாக எழுதி வழங்கியுள்ளனர். இரண்டாவது பகுதியாக பதிவுசெய்யப்பட்டுள்ள அஞ்சலிகளும் ஆராதனைகளும் சந்திரிக்கா குமாரதுங்க, வீ.ஆனந்தசங்கரி, ரவூப் ஹக்கீம், ஏ.எச்.எம்.அஸ்வர், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், தி.மகேஸ்வரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, பெ. இராதாகிருஷ்ணன், எஸ்.சுபைர்தீன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அகில இலங்கை இந்து மாமன்றம், கந்தையா நீலகண்டன், டொமினிக் ஜீவா, தினகரன், கா.சிவத்தம்பி, வீரகேசரி (ஆசிரியர் கருத்து), கொழும்புத் தமிழ்ச் சங்கம், என்.எம்.அமீன், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு. ஊடகவியலாளர் அமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் ஊடகவியலாளர் ஒன்றியம், கரையோர செய்தியாளர் சங்கம், ஹொலிபீல்ட் தென்கிழக்கு செய்தியாளர் சங்கம், வ.கயிலாசப்பிள்ளை, கண்ணதாசன் மன்றம், சட்ட மாணவர் இந்து மகாசபை, முஸ்லிம் மீடியா போரம், சுபைர்தீன், தமிழர் நற்பணி மன்றம், மாளிகாவத்தை சித்தி விநாயகர் ஆலயம், சட்ட மாணவர் தமிழ் மன்றம், ஸ்லைசோ அமைப்பு, இந்துப் பொதுப்பணி மன்றம், தமிழ் நெற், ஐலண்ட், ஏசியன் ட்ரிபியூன் ஆகியோரால் வழங்கப்பட்டுள்ளன. மூன்றாவது பகுதியாக அமரர் சிவகுருநாதன் தொடர்பான கவிஞர்களின் பாமாலைகள் தொகுக்கப்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

How to get Free Spins On the Temu?

Articles Lolas Also offers A south Twist On the Filipino Preparing Live Agent Games: Mr Spin Collector Incentives Second step: Sign up to The newest