17881 அமிர்த புத்திரன் ஸ்ரீமத் சுவாமி ஜெகதீஸ்வரானந்தா.

தா.சியாமளாதேவி. திருக்கோணமலை: சிவயோக சமாஜம், சுவாமி கெங்காதரானந்தா சமாதி, 68, பிரதான வீதி, 1வது பதிப்பு, மாசி 2003. (திருக்கோணமலை: ரெயின்போ மினிலாப், 361, நீதிமன்ற வீதி).

xii, 127 பக்கம், தகடுகள், விலை: ரூபா 70.00, அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-6601-30-0.

இந்நூல் திருக்கோணமலை சிவயோக சமாஜ ஸ்தாபகர் அருள்மிகு ஸ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தா அவர்கள் சமாதி நிலையடைந்த 12ஆவது ஆண்டு நிறைவு தினத்தில் 16.02.2003 அன்று வெளியிடப்பட்டது. திருக்கோணமலையை ‘சிவபூமி” என்றார் திருமந்திரம் தந்த திருமூலர். இத்திருவிடத்தில் அமைந்த ஞானாலயம் சிவயோக சமாஜம். அதன் சைதன்யக் கோட்பாட்டிற்குக் காரணகர்த்தா அதன் தாபகர் ஸ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தா. அருட்குருவின் ஞான நிழலில் தழைத்து வளர்ந்த ஞானச்சுடர் ஸ்ரீமத் சுவாமி ஜெகதீஸ்வரானந்தா. அன்னாரின் திருச்சரிதமே சிவயோக சமாஜத்தின் 18ஆவது வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. மரணமிலாப் பெருநிலையளிப்பது அமிர்தம். இந்த அமிர்தத்தின் புத்திரன் என்றழைக்கப்பட்டவர் இத்தகு தகைமை உடையவரே என்பதை நூல் முழுவதும் உறுதிசெய்து நிற்கின்றது. ‘சின்னச் சுவாமி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட ஸ்ரீமத் சுவாமி ஜெகதீஸ்வரானந்தாவின் திவ்விய சரிதம் நமக்கு விளக்கி நிற்கும் முக்கிய விடயம் பூரண சரணாகதியின் மகத்துவமே. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 114726).

ஏனைய பதிவுகள்