சிவகாசி அருணாசலக் கவிராயர். கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
vi, 89 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சரித்திரம் என்ற மூலநூல் செய்யுள் வடிவிலானது. முதலில் 1898இல் சேற்றூர்ச் சமஸ்தான ஆசாரியரவர்கள் ஸ்ரீமத் சிதம்பரதேசிகரவர்கள் கட்டளையிட்டருளியபடி மேற்படி சமஸ்தான வித்துவான் இராமசாமிக் கவிராயரவர்களின் குமாரரும், திருவாவடுதுறை ஆதீனத்துச் சின்னப் பண்டாரச் சந்நிதியாகிய ஸ்ரீலஸ்ரீ நமசிவாயதேசிய சுவாமிகள் மாணாக்கரில் ஒருவருமாகிய சிவகாசி-அருணாசலக் கவிராயரால் இயற்றப்பட்டு, திருநெல்வேலி ஜில்லா மஹாஸ்ரீ மகாவித்துவான் வெ.ப.சுப்பிரமணிய முதலியாரவர்கள் பரிசோதனைக்குள்ளடங்கி, மேற்படி சேற்றூர்ச் சமஸ்தானம் மனேஜரவர்கள் மஹாஸ்ரீ இராக்கப்ப பிள்ளையவர்கள் பொருளுதவியால், சென்னை அல்பீனியன் அச்சுக்கூடத் தலைவர் சா.யோ.சவுரியப்பா அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. மூன்று மீள்பதிப்புகளைக் கண்ட பின்னர், நான்காவது பதிப்பாக இந்நூல் இலங்கை இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சினால் 2017இல் வெளியிடப்பட்டுள்ளது.