17889 1979இல் இருந்து கூட்டுறவில் கடந்துவந்த பாதை.

தி.சுந்தரலிங்கம். ஊர்காவற்றுறை: தி.சுந்தரலிங்கம் (நெறியாளர்), பலநோக்க கூட்டுறவுச் சங்கம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: யாழ் மாவட்ட கூட்டுறவுச்சபை அச்சகம், இல. 38, காங்கேசன்துறை வீதி).

xii, 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

தனது இளவயதிலிருந்து சுமார் 40 ஆண்டுகளாக கூட்டுறவுக்காக உழைத்தவர். தான் ஊர்காவற்றுறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் நெறியாளராக 1979ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தெரிவுசெய்யப்பட்டது முதல், அதன் உபதலைவராகிப் பின்னர், 1989ஆம் ஆண்டிலிருந்து தலைவராக இருந்த காலத்தில் தான் பெற்ற அனுபவங்களைத் திரட்டி ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் இந்நூலை எழுதியுள்ளார். கூட்டுறவில் தான் பெற்ற  சொந்த அனுபவங்களை பேசுகின்ற சிறு நூலாக அமைந்திருப்பினும், யாழ்ப்பாணப் பிராந்தியக் கூட்டுறவாளர்களின் சமூக வரலாறு பற்றிய ஒரு நூலாகவும் இதனைப் பார்க்கமுடிகின்றது. கூட்டுறவுத்துறை பல ஏற்ற இறக்கங்களுக்கு முகம் கொடுத்து நெருக்கடிகளை சந்தித்து, தடைகளைத் தாண்டி பயணிக்கவேண்டிய ஒரு துறை என்பதையும் எந்தச் சவால்களையும் எதிர்கொள்ள நல்லதொரு ஆளுமைமிக்க கூட்டுறவுத் தலைமையால் முடியும் என்பதையும் இந்த அனுபவம் வெளிப்படுத்தி நிற்கின்றது.

ஏனைய பதிவுகள்

Verde Salle de jeu

Aisé Tours gratuits casino sans dépôt | Quels Sont Les divers Caractère En compagnie de Casino Un tantinet ? Lequel Jeu Avec Salle de jeu