17890 கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்த தமிழ்ப் பேரறிஞர் பொ.சங்கரப்பிள்ளை அவர்களின் 88வது பிறந்தநாள் நினைவு வெளியீடு.

இ.க.கந்தசாமி. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (கொழும்பு 6: டெக்னோ அச்சகம், 581, 2/1 காலி வீதி, வெள்ளவத்தை).

(16) பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

தமிழறிஞர் பொ.சங்கரப்பிள்ளை மாவிட்டபுரத்தில் 1913 நவம்பர் 29அன்று பிறந்தார். சைவப் பெரியார் புலோலி சு.சிவபாதசுந்தரனார் அதிபராகவிருந்த காலகட்டத்தில் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் கல்வி கற்றார். பின்னர் அரசு சேவையிலும் அரசின் சொல்லாக்கத் துறையிலும் பணி புரிந்தார். வித்தியோதய பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். 1950ஆம் ஆண்டில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆயுள் உறுப்பினரானார். 1975இல் இச்சங்கத்தின் பொதுச் செயலாளராகி சங்க அபிவிருத்தியின் நிமித்தம்  பல்துறைப் பணிகளிலும் ஈடுபட்டார். 1981-1983 காலகட்டத்தில் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். சிறந்த தமிழறிஞராக மாத்திரமன்றி சிறந்த ஆராய்ச்சி அறிஞராகவும் இருந்து நாம் தமிழர், சைவ சித்தாந்தம்,  கல்யாணப் பொருத்தம், மரணத்தின் பின், பொருளாதாரப் பெறுமதிக் கோட்பாடுஆகிய ஐந்து நூல்களை எமக்கு வழங்கினார். இதில் ‘நாம் தமிழர்’ கொழும்புத் தமிழ்ச்சங்க வெளியீடாக வெளிவந்தது. இப்பேரறிஞரின் 88ஆவது பிறந்த நாளை மன்னிட்டு இச்சிறு மலர் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Nettcasino

Content Fordeler Og Bekk Spille Casino For Nett Beste Spillutviklere Bekk Spille Påslåt Online Casino Det er ansikt elv bestemme over en fair kundeservice du

Caesars Slots

Content Casino aztec goldt | Top De Juegos Sobre Casino En internet ¿por Los primero es antes Seleccionar Casino Org De Participar Tragamonedas En internet

16622 இங்கே நிறுத்தக் கூடாது : சிறுகதைகள்.

அ.முத்துலிங்கம். சென்னை 600077: நற்றிணை பதிப்பகம், பிளாட் எண் 45, சாய் கவின்ஸ் குமரன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீதேவி கருமாரியம்மன் நகர், கிருஷ்ணா நகர் பிரதான சாலை, நூம்பல், ஐயப்பன் தாங்கல், 1வது பதிப்பு, ஒக்டோபர்