17893 மலையகச் சுடர்மணிகள்.

மு.நித்தியானந்தன். விழுப்புரம் 605602: மணற்கேணி வெளியீடு, எண் 56, பிளாட் எண் 6F -கீழ்த்தளம், அரவிந்தர் நகர், கிழக்கு பாண்டி ரோடு, 1வது பதிப்பு ஏப்ரல் 2023. (சென்னை 600087: அபிசான் என்டர்பிரைசஸ்). 

164 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 22×14 சமீ., ISBN: 978-93-94698-57-4.

லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் அறிஞர் மு.நித்தியானந்தன் எழுதிய  18 அரசியல், கல்வியியல், கலை, இலக்கிய வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுப்பு இது. பேராசிரியர் சோ.சந்திரசேகரம்: கல்வியுலகின் ஒளிவிளக்கு, மலையகத்தின் கல்விச் சிற்பி ‘பாரதி’ ராமசாமி, கார்மேகம்: மலையகத் தமிழர் விரோத அரசியலின் சிருஷ்டி, ஐம்பதாயிரம் பிரதிகளில் வெளியான நடேசையரின் நூல், பெ.சந்திரசேகரன்: மலையக அடையாள அரசியலின் தனிநாயகன், மாத்தளையின் ஜீவநதி: கார்த்திகேசு, மாத்தளை வடிவேலன்: மலையக இலக்கியத்தின் எரிநட்சத்திரம், அமரர் சி.ஆறுமுகம்: பதுளையின் முதல் கல்வி முன்னோடி, லெனின் மதிவானம்: ஊற்றின் ஓட்டம் வற்றி நின்ற துயர், சித்தரமிர்தம்: சில குறிப்புகள், ஜுலியா மார்கரெட் கமெரூன்: பொகவந்தலாவையில் துயிலும் புகைப்படக் கலையின் முன்னோடி, கோகிலம் சுப்பையாவின் வாழ்வும் எழுத்தும், டீவைவநச டிசநற?, தலவாக்கொல்லை குரூப்: மலைநாட்டு மக்களின் போராட்டம், மலையருவி-மலையக எழுத்தின் விளைநிலம்: தமிழருவி கந்தசுவாமியின் அரும்பணி, இந்தியத் தமிழர்களும் வாக்குரிமையும், மலைநாட்டின் அரசியல், இலக்கியச் சிந்தனைகள், மே வரெங்: ‘இங்கே வா’ நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு ஆகிய தலைப்புகளில் பலராலும் அறியப்படாத பல்வேறு சுவையான தகவல்களை உள்ளடக்கியதாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72536).

ஏனைய பதிவுகள்

Multiple Diamond Position Review

Posts Tjd 0 75 Carat Round And you can Baguette Diamond 14k Light Silver Multiple Row Wedding ring Later twentieth Millennium Not familiar Contemporary Beverage