வள்ளியம்மை சுப்பிரமணியம். யாழ்ப்பாணம்: KAS சத்தியமனை நூலகம், தொல்புரம் மேற்கு, சுழிபுரம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2023. (சென்னை 600 091: சவுத் விஷன் புக்ஸ், 491-B, 4ஆம் இணைப்புச் சாலை, சதாசிவ நகர், மடிப்பாக்கம்).
252 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 1400., அளவு: 25.5×18 சமீ., ISBN: 978-81-96126-21-6.
இலங்கை பொதுவுடைமை இயக்கத்தின் தனித்துவமான தலைவர்களில் ஒரவராகத் திகழ்ந்தவர் கே.ஏ.சுப்பிரமணியம். அவரது இணையரான வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களின் நினைவுக் குறிப்புகள் இவை. இலங்கையின் கடந்த அரை நூற்றாண்டுகால அரசியல் வாழ்வில் ஏற்பட்ட பல நெருக்கடியான திருப்புமுனைகளில் செயல்பட்டவர் இவர். இலங்கை நாட்டில் மூன்று இனங்களும் ஒற்றுமை உணர்வுடன் வாழவேண்டும் என்று, அதற்குரிய ஆளுமையுடன் தன் உயிரைப் பணயம் வைத்து வாழ்வைச் சேவையாக நடாத்திய தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் இணையராகவும் தமிழ் மண்ணுக்காக தன் வாலிப வசந்தத்தை அர்ப்பணித்த இன விடுதலைப் போராளி ‘மீரான் மாஸ்டர்’ என்ற சத்தியராஜனை இழந்த தாயாகவும் வள்ளியம்மை சுப்பிரமணியம் எழுதிய நூல். இது முன்னர் ‘வாழ்வின் சந்திப்புகள்’ என்ற தொடராக முகநூலில் பிரசுரமானது.