க.சௌந்தரராஜன் சர்மா, மா.அருள்சந்திரன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: அளவெட்டி மகாஜன சபை, அளவெட்டி, 1வது பதிப்பு, மே 2021. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 379, கஸ்தூரியார் வீதி).
xii, 258 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ., ISBN: 978-624-98099-0-1.
இந்நூலுக்கான ஆசிச் செய்தி, வாழ்த்துரைகள், சான்றோர் பெருமக்களின் வாழ்த்துரைகள், சமூக மட்ட அமைப்புகளின் வாழ்த்துரைகள், வாழ்த்துக் கவிதைகள் என 51 ஆக்கங்கள் இம்மலரின் முதற்பகுதியில் இடம்பெறுகின்றன. ‘நாயகன் வரலாறு’ என்ற பிரிவில் மலர்க்குழு, வை.பாலசுப்பிரமணியன் ஆகியோரின் பார்வையில் திரு. நா.வேதநாயகன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்துவரும் ‘நயப்புரைகள்’ என்ற பிரிவில் முன்னாள் அரச அதிபர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் பற்றிய நயப்புரைகள் இடம்பெற்றுள்ளன. ‘பொதுக் கட்டுரைகள்’ என்ற பிரிவில் கல்வியில் கரையிலா அளவெட்டி ஊர் (எஸ்.ஜெபநேசன்), வடக்கு மாகாணத்தில் ஒரு பண்பாட்டுப் பல்கலைக்கழகம் (பொ.பாலசுந்தரம்பிள்ளை), பிற்பட்ட சோழர்காலத் தமிழகத்தில் நிலமானியம் – அதிகாரம் அரண்மனைகள்-பேரரசு முகாமை சாசனச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆய்வு (செல்லையா கிருஷ்ணராசா), யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராண கலாசாரம்- ஒரு மீள்வாசிப்பு (தி.செல்வமனோகரன்), யாழ்ப்பாணக் கச்சேரியின் சுருக்க வரலாறு (நவரத்தினம் பரமேஸ்வரன்), ஆய்வுக்குட்படாத சொல்வரவால் செந்தமிழ் இனிமை கெட்டுப் போகும் (ம.ந.கடம்பேஸ்வரன்), மனதோடு ஒரு பொழுது (திருமதி சிவமலர் அனந்தசயனன்), அளவெட்டியும் கலைகளும் (சிவபாதரத்தினம் சிவசிவா), பன்முக ஆளுமை பெற்ற வாழ்வியல் வழிகாட்டி பண்டிதர் (நா.கேதீஸ்வரன்), பெண்ணின் பெருந்தக்க யாவுள (திருமதி மனோகரி முருகமூர்த்தி), ‘சிவதொண்டன்’ ஸ்ரீகாந்தா அளவெட்டி தந்த ஒரு அரச அதிபரின் வாழ்வும் பணிகளும் ஒரு அறிமுகம் (க.சௌந்தரராஜன் சர்மா) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.