17903 எனது மக்களின் விடுதலைக்காக.

பொன்ராசா அன்ரன் (தொகுப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: பிரவாகம் வெளியீடு, நீதியான சமாதானத்துக்கும் ஜனநாயகத்துக்குமான நடுவம், Centre for Just Peace and Democracy(CJPD), Reussmatt 10, 6032 Emmen ,1வது பதிப்பு, மே 2022. (அச்சிட்ட இடம் குறிப்பிடப்படவில்லை: செரி அச்சகம்).

(20), 21-800 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 1500., அளவு: 25×18 சமீ., ISBN: 978-3-9523172-7-3.

மொத்தம் 197 ஆவணங்களும், பக்கம் 681-774 வரையில் அடங்கும் ஏராளமான அரிய புகைப்படங்களும் இப்பெரும் ஆவணத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ‘கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக நிலவிய அரசியல் சூழல், போராட்ட வெற்றி-தோல்வி, நடைமுறை அரசின் கட்டமைப்பு, தேசியம் உள்ளார்ந்த பரிணாம வளர்ச்சி ஆகியவை தொடர்பாக ஆண்டாண்டாக தலைவர் வே.பிரபாகரன் வழங்கிய மாவீரர் நாள் உரை, செவ்வி, அறிக்கை, செய்தி, கடிதம், உரை, ஆசிச் செய்தி போன்றவை ஒழுங்காக இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் ‘சண்டே’ என்ற ஆங்கில வார ஏட்டின் 1984 மார்ச் 11-17 பதிப்பில் தலைவர் பிரபாகரனின் செவ்வியோடு தொடங்கும் இந்த ஆவண நூல், 2009 ஜனவரி 12இல் அவர் அனுப்பிய நியமனக் கடிதத்துடன் நிறைவு காண்கிறது. இந்த உரையே அவர் உலகத்துக்கு விடுத்த இறுதிப் பகிரங்க உரை என்று உறுதியாகக் கொள்ளலாம். (தொகுப்பாசிரியர்-பதிப்புரையில்).

ஏனைய பதிவுகள்

15026 ஸ்ரீகாந்தலட்சுமியின் நூலகவியற் சிந்தனைகள்.

ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம் சிவநேசன் (மூலம்), க.சௌந்தரராஜ சர்மா, சு.நவநீதகிருஷ்ணன், இ.குபேசன் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: நூலக விழிப்புணர்வு நிறுவகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (யாழ்ப்பாணம்: தாயகம் டிஜிட்டல், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அருகில், திருநெல்வேலி). xviii,

15330 ஏ.எல். 1997 தமிழ் புதிய பாடத் திட்டத்திற்கான உரைநடைத் தொகுப்பு.

எஸ்.எஸ்.ஆனந்தன். கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு).  (4), 116 பக்கம், விலை: ரூபா 90.00, அளவு: