17911 பேராசிரியர் கலாநிதி ஆ.சதாசிவம் அவர்களின் நினைவுமலர்.

நினைவு மலர்க் குழு. கொழும்பு 6: திருமதி திருஞானேஸ்வரி சதாசிவம், 11, சின்சபா வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜுலை 1988. (கொழும்பு 6: ஜெயா ஓப்செட் பிரின்டர்ஸ்).

72 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

யாழ்ப்பாணம் அராலியைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தமிழ்ப் பேராசிரியர் அமரர் கலாநிதி ஆறுமுகம் சதாசிவம் (15.02.1926-01.07.1988) அவர்களின் நினைவுமலர். பேராசிரியர் சதாசிவம் மெய்க்கீர்த்திப் பனுவல் (த.கனகரத்தினம்), ஓராதவனை இழந்தோம் நாம் (சந்தனா நல்லலிங்கம்), ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் நூலுக்கான சிறப்புப் பாயிரம் (புலவர் பாண்டியனார்), உய்ப்பித்த உத்தமன்-கவிதை (துரை சிவலிங்கம்), நினைவிலே நிற்கும் பேராசிரியர் (ஆ.வேலுப்பிள்ளை), அன்பும் எளிமையும் மிக்க அறிஞர் (க.இ.க.கந்தசாமி), மாறாத இன்முகத்தான் மகத்தான உழைப்பாளி- ஒரு நினைவுக் குறிப்பு (கார்த்திகேசு சிவத்தம்பி), தமிழ் உலகுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கின்றது (க.கனகராசா), மறைந்த பேராசிரியர் சில மனப் பதிவுகள் (துரை. மனோகரன்), என் நினைவு அலைகளில் பேராசிரியர் (ஆர்.சிவகுருநாதன்), மொழிநூல் வல்லுநர் (வை.கனகரத்தினம்), A Great loss to Sumerian Studies (Ashley Halpe), From the Senate of the University of Peradeniya (A.P.R.Aluvihare), A Friend Indeed (Bertram Bastiampillai), An Academian and Philosopher (Emil A.Wijewanta), We are left with the Thought (S.Thillainathan), A Reputed Scholar (J.M.Gunadasa),  A Good Scholar (J.B.Disanayake),  A Revered Teacher (R.Paskaralingam), As Chief Examiner (Arthur Wedamalla), A Promoter of Peace through Religion (L.G.Hewage), A Genial Soul (G.D.Wijayawardhana), A Schlor, A Hard Worker and  My Teacher (A.Sanmugadas), Events and Achievements,  பேராசிரியர் ஆ.சதாசிவம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் ஆகிய ஆக்கங்கள் இந்நினைவுப் பதிகையில் இடம்பெற்றுள்ளன. 

ஏனைய பதிவுகள்

14158 பருத்தித்துறை கொட்டடி ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சித்திரத்தேர் வெள்ளோட்ட சிறப்புமலர் 23.2.2017.

இ.திருமாறக் குருக்கள் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: தேர்த் திருப்பணிச் சபை, கொட்டடி ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (பருத்தித்துறை: சிவா ஓப்செட் பிரின்டர்ஸ், வியாபாரிமூலை). xvviiiஇ 33 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,