17913 அறிவியல் வளர்ச்சியில் முஸ்லிம் விஞ்ஞானிகளின் பங்கு.

முஹம்மது முபத்திஹ் (ஆங்கில மூலம்), ஃபசான் நவாஸ் (தமிழாக்கம்). கொழும்பு: விஸ்டம் சொசைட்டி, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 10: UDH Compuprint, மொஹிதீன் மஸ்ஜித் வீதி).

47 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-624-95441-1-6.

Contribution of Muslim Scientists towards the development of Sciences என்ற தலைப்பில் கலாநிதி Mohammed Mofattih எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கம். விஞ்ஞான முன்னேற்றத்தில் முஸ்லிம் விஞ்ஞானிகளின் பங்கு, இஸ்லாமிய விஞ்ஞான நகர்வின் ஆரம்பம், பக்தாத்தில் நிஸாமிய்யா பல்கலைக்கழகம், ஸபா சகோதரத்துவ கழகம், இஸ்லாமிய விஞ்ஞானிகளின் ஆய்வு முறைகள், முஸ்லிம் விஞ்ஞானிகளும் பரிசோதனை முறையும், மருத்துவத்துறையில் முஸ்லிம்கள், ஸகரியா ராஸியின் அளப்பரிய பணிகள், அபூரைஹான் அல் பிரூனி ஆகிய இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71596).

ஏனைய பதிவுகள்

11542 கம்பராமாயணம்: யுத்தகாண்டம்-கும்பகருணன் வதைப்படலம் (செய்யுள் 1 முதல் 171 வரை).

ந.சுப்பையபிள்ளை (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 1வது பதிப்பு, 1956. (யாழ்ப்பாணம்: நாமகள் அச்சகம், 351, காங்கேசன்துறை வீதி). xvi, 232 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 20.5×14 சமீ. கல்விப்பொதுத்

14217 தோத்திரக் களஞ்சியம்.

நினைவு மலர்க் குழு. கொழும்பு 5: அமரர் வள்ளிநாயகி சிவசிதம்பரம் குடும்பத்தினர், 245, பொல்ஹேங்கொட வீதி, கிருலப்பனை, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 12: வக்மீ அச்சகம், 258ஃ3, டாம் வீதி). 128 பக்கம்,