த.கலாமணி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
28 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-77-2.
ஈழத்து நாடக வரலாற்றில் தவிர்க்கப்பட முடியாத இசை நாடக நடிகரும் அண்ணாவியாருமான எஸ்.தம்பிஐயா அவர்களின் கலைப்புலம் பற்றி விரிவானதொரு பார்வையை வழங்கும் நூல். அண்ணாவியார் எஸ். தம்பிஐயா 2000இற்கும் மேற்பட்ட மேடைகளில் நாடகங்களை நடித்துள்ளார். பல நாடகப் பிரதிகளை எழுதியுள்ளதோடு அவற்றை அண்ணாவியம் செய்துமுள்ளார். தன்னை பிரபலப்படுத்தாத அடக்கமான சுபாவம் காரணமாக பல இடங்களில் அவர் தவிர்த்து விடப்பட்டிருந்தார். ஆனால் அவரது நாடகம் சார்ந்த செயற்பாடுகள் என்றும் போற்றுதற்குரியது. நாடகமே வாழ்க்கையாய் வாழ்ந்து மறைந்தவர் இவர். பல கலைஞர்களின் உருவாக்கத்திற்கும் பல நாடகப் பிரதிகளின் உருவாக்கத்திற்கும் காரணமானவர் எஸ். தம்பிஐயா. சோதிடக் கலையை நன்கு கற்று, மனையடி சாத்திரத்தில் கைதேர்ந்தவராக இருந்து சிறப்பான பலனை, நிலையத்தை கணிக்கக்கூடியவராயும் இவர் இருந்துள்ளார். வடமராட்சிப் பகுதியில் பல நூறு வீடுகளுக்கான நிலையங்களையும் கிணறுகளையும் கணித்துக் கொடுத்தவர். அண்ணாவியாரின் உருவச்சிலை, அல்வாயில் ‘கலை அகம்’ வளாகத்தில் அமைகின்ற வேளையில் இந்நூல் வெளியிடப்படுகின்றது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 257ஆவது நூலாக வெளிவந்துள்ளது.