வி.கந்தவனம். கனடா: கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம், இணை வெளியீடு, கனடா: அமரர் வித்துவான் செபரத்தினம் குடும்பத்தினர், 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (கனடா: மல்டி ஸ்மார்ட் சொலுஷன், ஒன்ராரியோ).
38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ. அமரர் வித்துவான் செபரத்தினம் அவர்களுடன் தமிழ இலக்கியப் பணி மூலம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த கவிஞர் கந்தவனம் அவர்கள் வித்துவான் செபரத்தினம் அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டி அவர் வாழும் காலத்திலேயே அவரைக் கௌரவிக்க எண்ணிச் ‘செபரத்தின வெண்பா’ என்னும் இச் சிற்றிலக்கிய நூலைப் படைத்து அதனை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளை துர்அதிர்ஷ்ட வசமாக வித்துவான் அவர்களின் திடீர் மறைவு ஏற்பட்டது. அவர் மறைந்தாலும் தான் தொடர்ந்ததொரு வரலாற்றுப்பணியை கவிஞர் கந்தவனம் முடித்து, இந்நூலை வழங்கியுள்ளார். வித்துவான் செபரத்தினம் அவர்கள் தமிழுலகிற்கு ஆற்றிய அரும் பணியை நாற்பது வெண்பாக்களில் கவிநாயகர் கந்தவனம் அவர்கள் தனக்கேயுரிய கவித்துவத்துடன் நயம்பட விரித்து வைத்துள்ளார். இந்நூலுக்கான அணிந்துரையை அகணி சுரேஷ் அவர்கள் வழங்கியுள்ளார். கவிஞர் கந்தவனம் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்த வித்துவான் செபரத்தினம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பும், தாய்வீடு இதழில் (பெப்ரவரி 2014) கவிஞர் கந்தவனம் எழுதியிருந்த ‘செந்தமிழ்ச் செம்மல் வித்துவான் செபரத்தினம்’ என்ற கட்டுரையும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன