17942 நவாலியூர் க.சோமசுந்தரப் புலவரும் அவர் இயற்றிய பிரபந்தங்களும்.

எஸ்.சிவானந்தராஜா. யாழ்ப்பாணம்: சிற்றம்பலம் சிவானந்தராஜா, இந்துக் கல்லூரி வீதி, செட்டிகுறிச்சி, பண்டத்தரிப்பு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2024. (யாழ்ப்பாணம்: சாய்ராம் பிரின்டர்ஸ், பிரதான வீதி, சங்கானை).

(2), 64 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-98955-1-5.

சோமசுந்தரப் புலவர் (மே 25, 1878 – ஜூலை 10, 1953) இலங்கையின் வாழ்ந்து மறைந்த தமிழ், சைவ அறிஞர்களுள் முக்கியமானவர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவரான இவர், தங்கத் தாத்தா என்றும் இளையோரால் அழைக்கப்படுகிறார். சிறுவர் பாடல்கள், சிற்றிலக்கியச் செய்யுள்கள், உரைநடை நூல்கள், செய்யுள்கள், நாடகம் என பல வகைமைகளில் இவர் எழுதினார். பனைவரலாறு பற்றிய தாலவிலாசம் அவரது முக்கியமான படைப்பாகும். இந்நூலில் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பற்றியும் அவரது பிரபந்தங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிமுகம், வரலாறு, வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், இயற்றிய பிரபந்தங்கள், நில பிரபந்தங்களின் அறிமுகம், விண்ணப்பம், தொகுப்பு-கவிதை, புலவருடன் நெருங்கிப் பழகிய புலவர்கள் ஆகிய இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

17119 இலங்கையில் பௌத்தம்: சமய சீர்திருத்தமும் தேசியவாதமும்- 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகள்.

க.சண்முகலிங்கம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). 110 பக்கம், விலை: