சு.பாக்கியநாதன், சி.இராஜகருணா (தொகுப்பாசிரியர்கள்). ஜேர்மனி: தொகுப்பாசிரியர்கள், 1வது பதிப்பு, 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).
230 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
இந்நூலில் ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துப் படைப்பாளர்களின் வாழ்வும் பணியும் பற்றிய தகவல்கள் கட்டுரை உருவில் எழுதித் தொகுக்கப்பட்டுள்ளன. பொ.கருணாகரமூர்த்தி, ச.சிவசுப்பிரமணியம், கொசல்யா சொர்ணலிங்கம், மு.க.சு.சிவகுமாரன், அ.புவனேந்திரன், காசி. வி.நாகலிங்கம், சி.சிவராஜன், ஆ.பூபதிபாலவடிவேற்கரன், பே.பாலராஜா, அ.ஜேசுதாசன், பா.சூரியகுமார், இ.பாலசுந்தரம், பா.பாலசுப்பிரமணியம், இரா.சம்பந்தன், கிருபாநிதி சற்குணநாதன், பொ.புத்திசிகாமணி, தி.லம்பேட், மேரி அகஸ்தா ஜெயபாக்கியம் நடேசன், இ.க.கிருஷ்ணமூர்த்தி, ஞானகௌரி கண்ணன், இ.ரவிசங்கர், தவமலர் கல்விராஜன், மீனா சிவலிங்கம், நகுலா சிவநாதன், அனித்தா திருமால், சந்திரகௌரி சிவபாலன், சாந்தி நேசக்கரம், செ.தவா, கலைவாணி ஏகானந்தராஜா, சு.லம்போதரன், சி.சற்குணநாதன், சர்வேஸ்வரி கதிரித்தம்பி, ஜோர்ஜ் டயஸ், ஷறீகா சிவநாதன், சுகந்தி ரவீந்திரநாத், ராணி சம்பந்தர், ஜெகதீஸ்வரி இராஜரட்ணம், த.சிவலிங்கம், இ.பாஸ்கரன், சோபியா பாஸ்கரன், மங்கையற்கரசி சிவகிருஷ்ணநாதன், கீத்தாராணி பரமானந்தன், சாந்தினி வரதராஜன், இராஜேஸ்வரி லோகநாதன், வசந்தா ஜெகதீசன், கெங்காதேவி ஸ்ரான்லி, சாந்தி துரையரங்கன், ஏ.வரதராஜா, ப.தியாகராசா, வானதி தேசிங்குராஜா, சி.ஸ்ரீபதி, சி.க.நடராஜா, த.இரவீந்திரன், ப.விசுவலிங்கம், க.சுப்பிரமணியம், பேரின்பபுஷ்பராணி ஜோர்ஜ், இராஜன் (இராசு), நா.சி.கமலநாதன், ச.ஸ்ரீகாந்தா, ச.கனகசபாபதி, விக்னேஸ்வரி பாக்கியநாதன், சு.பாக்கியநாதன், கா.க.முருகதாசன், சி.இராஜகருணா, சி.இராசப்பா (முகில்வாணன்), வை.சிவராசா, இராஜேஸ்வரி சிவராசா, பொ.ஸ்ரீஜீவகன், மா.விஜயகுலசிங்கம், வி.சபேசன், என்.வி.சிவநேசன், ஜெயகாந்தி இராசப்பா, அருட்பணி அன்ரன் ஜோன் அழகரசன், க.சுபாஷினி, வளர்மதி யோகேஸ்வரன், சி.ராஜ்சிவா, சிவஸ்ரீ ஆறுமுக பாஸ்கர குருக்கள், இ.சேகர், து.நந்தகுமார், து.கணேசலிங்கம், சுந்தராம்பாள் பாலச்சந்திரன், லோகாஞ்சனா அருந்தவநாதன், சந்திரவதனா செல்வகுமாரன், அன்ரன் இக்னேஷியஸ் ஜோசப், ஆகிய படைப்பாளர்களின் வாழ்வும் பணியும் இங்கு தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் பதிவுகளின் சிதறல்கள், இன்று வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகள் பத்திரிகைகள், 1980-2022 வரை வெளிவந்த சஞ்சிகைகள் பத்திரிகைகள், பதிப்பாளரின் பார்வை, நன்றி நவில்கிறோம் ஆகிய 89 தலைப்புகளின் கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.