17963 வேருவலை எனும் பர்பரீன் (கட்டுரைத் தொகுப்பு).

எஸ்.எம்.கமாலுத்தீன் (மூலம்), எம்.எஸ்.எம்.அனஸ் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 2ஆவது பதிப்பு, 2024, 1வது பதிப்பு, 1979. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

86 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-72-0.முஸ்லீம் பாரம்பரியம், வரலாறு, இலக்கியம் என்பவற்றை மையப்படுத்தி எஸ்.எம்.கமால்தீன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக 1979இல் வெளிவந்த இந்நூல் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களின் அறிமுகக் குறிப்புடனும் ஆசிரியரின் புதிய கட்டுரை ஒன்றுடனும் மீள்பதிப்பாகியுள்ளது. இத்தொகுப்பின் பிரதான கட்டுரையான ‘பர்பரீன் (வேருவலை)’ பேருவளையின் வரலாற்றை விரிவாக நோக்குகின்றது. தென்மாகாணத்தின் முதல் முஸ்லிம் குடியேற்றம் என்பதையும் கடந்து இலங்கை முஸ்லிம்களின் குடியேற்ற வரலாறு அந்த மாகாணத்தோடும் பேருவளையோடும் கலந்திருப்பதை இக்கட்டுரை உணர்த்துகின்றது. இந்நூலின் முதலாவது கட்டுரையான ‘முஸ்லிம்களின் பாரம்பரியம்’ இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்மையையும் முஸ்லிம் சமூகக் கட்டமைப்பின் மையக்கூறுகளையும் சிறப்பாகச் சுட்டிக்காட்டுகின்றது. ‘இலங்கை முஸ்லிம்களின் இலக்கிய முதிசம்’ என்னும் கட்டுரை தமிழ்நாடு மற்றும் இலங்கை முஸ்லிம்களின் இலக்கியப் பாரம்பரியம் பற்றியது. சீறாப்புராண காலத்தில் இருந்து நவீன முஸ்லிம் ஊடக வரலாறு வரை சுருக்கமாகப் பல விடயங்களை இக்கட்டுரை வழங்குகின்றது. கிராமியக் கவியான ‘வரகவி செய்கு அலாவுதீனும் அவரது பாடல்களும்’ என்ற நூல் பற்றி அவர் எழுதிய கட்டுரை இறுதியாக இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

16772 மன ஊஞ்சல்.

மலரன்னை (இயற்பெயர்: திருமதி அற்புமராணி காசிலிங்கம்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv,